|
வ
விசேடத்தை, எம்பெருமானோடே
கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி. ஆற்றாமை மீதூர்ந்திருக்கச் செய்தே இவள் தரித்திருந்த
இருப்பைக் கண்டு, தோழியானவள், ‘முன்புத்தை அளவுகள் அன்றிக்கே, இவள் தேறி இருந்தாள், அவன்
வாராதிருக்க இவளுக்கு இத்தனை தேற்றம் உண்டாம் போது, சாகசங்களிலே துணிந்தாளாகவேணும்’ என்று
பார்த்து, ‘நீ செய்ய நினைக்கிற இது, 1உன் தலைமைக்கும் அவன் தலைமைக்கும் உன்
மதிப்புக்கும் உன் பிறப்புக்கும் உன்னுடைய மர்யாதைகளுக்கும் தகாது கண்டாய்’ என்ன, ‘என் ஸ்வரூபத்தை
அழித்தாகிலும் மடல் எடுக்கை தவிரேன்’ என்று துணிந்து துணிவைத் தோழிக்கு அறிவிக்க; இதனைக்
கேட்டு அஞ்சி, சர்வேச்வரன், இருந்த இடத்தில் இருக்க மாட்டாமை வந்து முகங்காட்டித் தானும்
சத்தைபெற்று இவளையும் தரிப்பித்தானாய்த் தலைக்கட்டுகிறது.
2இவர்
மடலிலே துணிந்தால் கடுக வந்து முகங்காட்டிப் பிழைக்கில் பிழைக்குமித்தனை போக்கி, இல்லையாகில்
சத்தை கிடக்க விரகு இல்லை அன்றோ அவனுக்கு; பிரஹ்மாஸ்திரத்துக்குத் தப்ப ஒண்ணாதே அன்றோ
அவனுக்கு.
_____________________________________________________
1. “யாம் மடல் ஊர்ந்தும்”,
“யாம் மடல் இன்றி” என்பனவற்றைத்
திருவுள்ளம்பற்றி ‘உன் தலைமைக்கும்’ என்கிறார்.
தலைமை-வைலக்ஷண்யம்,
“ஆதிமூர்த்தி” என்பதனைத் திருவுள்ளம்பற்றி ‘அவன் தலைமைக்கும்’
என்கிறார்.
“என்னை நிறை கொண்டான்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி
‘உன் மதிப்புக்கும்’ என்கிறார். “குதிரியாய்
மடலூர்தும்” என்றதனைத்
திருவுள்ளம்பற்றி ‘உன் பிறப்புக்கும்’ என்கிறார். “என்னை நிறைகொண்டான்”
என்பதனை நோக்கி ‘உன்னுடைய மர்யாதைகளுக்கும்’ என்கிறார். ‘என்
ஸ்வரூபத்தை அழித்தாகிலும்’
என்றது, “யாம் மடலூர்ந்தும்” என்றதனைத்
திருவுள்ளம்பற்றி. ‘தோழிக்கு அறிவிக்க’ என்றது, தோழிக்கு
அறிவிக்கும்
வியாஜத்தாலே ஈச்வரனுக்கு அறிவிக்க என்றபடி, “இரைக்கும் கருங்கடல்
வண்ணன்” என்றதனைத்
திருவுள்ளம்பற்றி “முகங்காட்டித் தானும் சத்தை
பெற்று” என்கிறார்.
2. முகம் காட்டாவிடில்,
இவளுக்குச் சத்தை இல்லையாமது ஒழிய, அவனுக்குச்
சத்தை இல்லையாமோ? என்ன, ‘இவர் மடலிலே’ என்று
தொடங்கி அதற்கு
விடை அருளிச்செய்கிறார். என்றது, பரம காதலன் ஆகையாலே, இவளைத்
தரிப்பியாவிடில்
அவனுக்கும் சத்தை கிடவாது என்றபடி. விரகு இல்லாமை
எப்படி? என்ன, ‘பிரஹ்மாஸ்திரத்துக்கு’ என்று
தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார். பிரஹ்மாஸ்திரத்துக்கு-பிரஹ்மாஸ்திரத்தைப்
போன்று
கடக்க முடியாததுக்கு.
|