பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
83

1இதற

1இதற்கு முன்னர், ‘அவனாலே பேறு’ என்று போந்தாரேயாகிலும், அடையத்தக்கதான கைங்கர்யத்துக்கு முன்பு உள்ளனவாய் இருப்பன பரபக்தி பரஞான பரமபக்திகள் என்பன சில உளவே அன்றோ, அவை தவிர ஒண்ணாதே. 2இனி, பக்திமானுக்கும் பக்தி உண்டு, பிரபந்நனுக்கும் பக்தி உண்டு, ருசியை ஒழியப் பரபத்தி பண்ணக்கூடாதே, 3பக்திமானுடைய பக்தி, விதி ரூபமாய் வரும்; பிரபந்நனுடைய பக்தி, ருசி காரியமாயிருக்கும். பக்திமானுக்குச் சாதன ரூபமாயிருக்கும், பிரபந்நனுக்குத் தேக யாத்திரைக்கு உறுப்பாக இருக்கும். பக்திமானுக்குப் பலத்திலே

___________________________________________________ 

1. இத்திருவாய்மொழியில், ‘மடல்’ என்று சொல்லுகிறது, ஸ்வாபதேசத்தில்
  பக்தியை அன்றோ; அங்ஙனம் இருக்க, அவனையே உபாயமாகப்
  பற்றியிருக்கிற இவர்க்கு அது உண்டாகலாமோ? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘இதற்கு முன்னர்’ என்று தொடங்கி. என்றது, இவருடைய
  பக்தி, சாதன பக்தியன்று; சாத்திய பக்தி என்றபடி. பரபக்தி-சம்ஸ்லேஷ
  விஸ்லேக்ஷைக சுகதுக்கத்வம்; சேர்க்கையாலே இன்புறுதலும், பிரிவினாலே
  துக்கித்தலும். பரஞானம்-ஸ்புடசாக்ஷத்காரம்; மிகத் தெளிந்த ஞானம்
  என்றபடி. பரம பக்தி-விஸ்லேஷத்தில் சத்தைக்கு ஹாநி பிறத்தல்; பிரிவிலே
  முடியும்படியான நிலையை அடைதல். இவற்றைமுறையே, விஸத விஸததர
  விஸததமம் என்பார்கள்.

2. இவர்தாம் ஆர்த்தப் பிரபந்நர் ஆகையாலே, பிரபத்தி செய்வதற்கு
  முன்னேயும் பக்தி உண்டு என்கிறார் ‘இனி பக்திமானுக்கும்’ என்று
  தொடங்கி. பிரபந்நன்-பிரபத்தியைச் செய்தவன் பிரபந்நன். பிரபத்தியாவது,
  பகவத் பிரவிர்த்தி விரோதி ஸ்வப் பிரவிர்த்தி நிவ்ருத்தி சாத்ய:பிரபத்தி.
  என்றது, பகவானுடைய ரக்ஷகத்துக்கு விரோதியான தன் செயல்களின்
  இன்மையால் சாதிக்கப்படுவது.

3. பக்தி பிரபக்தி நிஷ்டர்களுடைய பக்தி தாரதம்மியத்தை அருளிச்செய்கிறார்
  ‘பக்திமானுடைய’ என்று தொடங்கி. ‘விதி ரூபமாய் வரும்’ என்றது,
  “நிதித்யாசிதவ்ய:” என்கிற விதி மூலமாய் வரும் என்றபடி. என்றது, விதி
  ரூபமாய் வருவது ஆகையாலே பக்தி நிஷ்டனுக்குச் சாதன ரூபமாய்
  இருக்கும். தேக யாத்திரைக்கு உறுப்பாகையாலே பிரபந்நனுக்கு ருசிகார்யமாய்
  இருக்கும் என்றபடி. ‘பக்திமானுக்குப் பலத்திலே சிரத்தை இல்லாத போது’
  என்ற வாக்கியத்திற்குக் கருத்து, சாதன ரூபமாயிருக்கையாலே பக்திமானுக்கு
  விடக்கூடியதாயிருக்கும் என்பது. ‘பிரபந்நனுக்கு’ என்று தொடங்கும்
  வாக்கியத்தின் கருத்து, அநுபவ கைங்கர்யமான தேக யாத்திரைக்கு
  உறுப்பாகையாலே, கைங்கர்யத்துக்கு ஆஸ்ரயமான ஆத்மாவினுடைய
  சேஷத்வமாகிற சொரூபமடியாக வந்ததாகையாலே விடக்கூடாததாய்
  இருக்கும் என்பது.