பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
85

New Page 1

செய்யப் புகுகிற இதனால் அவ்விஷயத்துக்குப் பழிப்பை உண்டாக்கப் புகுகிறாயே” என்று தோழி சொல்ல, நான் அவ்விஷயத்துக்குப் பழிப்பை உண்டாக்கப் புகுகிறேன் அல்லேன், பழிப்பை அறுக்கப் புகுகின்றேன் காண் என்கிறாள்.

    மாசு அறு சோதி-1கலந்து பிரிந்தவள் ஆற்றாமை இன்றிக்கே மர்யாதைகளை நோக்கிக்கொண்டிருத்தலானது அத்தலைக்குத் தாழ்வு போலே காணும்; 2பிரிந்தால், இப்படிச் செய்யாத அன்று குற்றமே அன்றோ அழகிற்கு. 3நான் என்னுடைய மர்யாதைகளைக் குலைத்தாகிலும் அவன் முகத்திலே விழித்தல் தவிரேன் என்கிறாள்; 4வடிவு அதுவாயிருக்க, நான் மடல் எடாது ஒழியும்படி எங்ஙனேயோ.

_____________________________________________________

  கூறியவுடனேயே அவன் வந்து முகம் காட்டுகை நிச்சயமாகையாலே
  ‘தன்னை ஆசைப்பட்டு மடல் எடுக்க ஒருப்பட்ட போதே, தன்
  பெருமையைப் பாராதே வந்து முகங்காட்டுவதே! இவன் சீலம் இருந்தபடி
  என்!’ என்று கூறுபவாதலானும், ‘பெண்டிரிற்றிலகமன்ன இவள் மடல் எடுக்க
  நினைத்ததனால் அவன் ஆண்நாயகன் ஆவான்’ என்பது புலப்படுமாதலானும்
  எனக்கொள்க.

1. “மாசறு சோதி” என்றதற்கு, மடல் எடுக்கையாலே ‘மாசறு சோதி ஆனான்’
  என்றும், ‘மாசறு சோதி’ ஆகையாலே மடல் எடுக்கச் செய்தான் என்றும்
  இரண்டு வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார். அவற்றுள் மடல்
  எடுக்கையாலே மாசறு சோதி ஆனான் என்று சொன்ன போதே, மடல்
  எடாது ஒழிதல், சோதிக்கு மாசு என்று தோன்றுகையாலே, அங்ஙனம்
  தோன்றுகிற பொருளை அருளிச்செய்கிறார்.  ‘கலந்து பிரிந்தவள்’ என்று
  தொடங்கி. மர்யாதை-பெண்மைக்குரிய குணங்கள், அத்தலைக்கு-அழகோடு
  கூடின அவனுக்கு.

2. பெண்மைக்குரிய குணங்களை நோக்கிக்கொண்டிருந்தால் அவன் அழகிற்குத்
  தாழ்வாமாறு யாங்ஙனம்? என்ன, ‘பிரிந்தால்’ என்று தொடங்கி அதற்கு விடை
  அருளிச்செய்கிறார். இப்படிச் செய்யாத அன்று-மடல் எடுப்பேன் என்று
  இப்படிச் சொல்லாச் செய்யாதிருந்தபோது.

3. இரண்டாவது பொருளை அருளிச்செய்கிறார் ‘நான் என்னுடைய’ என்று
  தொடங்கி.

4. ‘தவிரேன்’ என்கைக்குக் காரணம் யாது? என்ன, ‘வடிவு அதுவாயிருக்க’
  என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.