பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
86

1

1கெடுவாய், அவ்வடிவு குற்றங்கட்கு எல்லாம் எதிர்த்தட்டானது காண். ஆதலால், நான் மடல் எடாது இருக்கை அவ்வடிவிற்குக் குற்றத்தை உண்டாக்குகை காண். 2‘அவன் அவ்வடிவை உகந்தார்க்குக் கொடான்’ என்னும் பழியைத் துடைக்கக் காண் நான் பார்ப்பது; 3“பக்தர்களுக்காகவே என்கிற உடம்பைத் ‘தனக்கு’ என்று இருக்கையாகிற இது அவ்வடிவிற்குக் குற்றமே அன்றோ. 4மடல் எடுத்தல் மாசு’ என்று இருக்கிறாள் தோழி; ‘மடல் எடாது ஒழிகை மாசு’ என்று இருக்கிறாள் இவள். 5பிரிவில் இப்படி ஆற்றாமை விளையாதாகில் நாம் காண்கிற விஷயங்களைப் போன்றது ஆகுமே. 6வடிவிலே அணைந்தவள் ஆகையாலே முற்பட

____________________________________________________

1. “மாசறு சோதி” என்றதற்கு அருளிச்செய்யும் இரு வகைப் பொருள்களுள்,
  முதற்பொருளில் “சோதி” என்பதற்கு அழகு என்று பொருள்
  அருளிச்செய்தார். இப்பொழுது “சோதி” என்பதற்கு, விக்கிரஹம் என்று
  பொருள் அருளிச்செய்யத் திருவுள்ளம்பற்றி அவ்விக்கிரஹத்துக்கு மாசு
  இன்னது என்று காட்டுகிறார். ‘கெடுவாய்’ என்று தொடங்கி. கெடுவாய்
  என்பது, வார்த்தைப்பாடு.

2. மடல் எடுக்கிறேன் என்று கூறுவதால் வடிவிற்கு மிக்க பெருமையே ஒழிய,
  தாழ்வு அன்று காண் என்கிறாள் ‘அவன் அவ்வடிவை’ என்று தொடங்கி.

3. விரும்பினவர்கட்குக் கொடாதொழிகை தாழ்வோ? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் “பக்தர்களுக்காகவே” என்று தொடங்கி.

  “ந தே ரூபம் ந ச ஆகாரோ ந ஆயுதானி ந ச ஆஸ்பதம்
  ததாபி புருஷாகாரோ பக்தாநாம் த்வம் பிரகாஸஸே”

  இது, ஜிதந்தா. 5.

4. ‘மடல் எடுக்க ஒண்ணாது’ என்று விலக்குகிற தோழியைக் குறித்து, ‘மடல்
  எடாது இரேன்’ என்று சொல்லுகிற தலைவி, “மாசறு சோதி” என்ற போதே,
  ‘மடல் எடாது ஒழிகை மாசு’ என்பது அவள் கருத்து என்று
  தோற்றுகையாலும், விலக்குகிற தோழிக்கும் ‘மடல் எடுக்கை மாசு’ என்பது
  கருத்து என்று தோற்றுகையாலும், இரண்டனையும் அருளிச்செய்கிறார்
  ‘மடல் எடுத்தல்’ என்று தொடங்கி.

5. ‘மடல் எடாது ஒழிகை, மாசு ஆனபடி எப்படி? என்ன, ‘பிரிவில்’ என்று
  தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

6. “ஆசறு சீலனை” என, குணத்தை முற்கூறாது, “மாசறு சோதி” என வடிவை
  முற்கூறியதற்குக் காரணம் என்? என்ன, ‘வடிவிலே அணைந்தவள்’ என்று
  தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.