பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
87

வடிவிலே மண்டுகிறாள். அன்றிக்கே, மேல், ‘ஆசு அறு சீலனை’ என்னாநிற்கச் செய்தே, குணத்திலும் விக்கிரஹம் மனக் கவர்ச்சியைச் செய்கையாலே ‘மாசு அறு சோதி’ என்று முற்பட வடிவழகைச் சொல்லுகிறாள் என்னுதல். 1நான் மடல் எடுக்க நினைத்த அளவிலே மாசு அற்று வருகிறபடி பாராய் என்கிறாள்.

   
என் செய்ய வாய்-2“அவாக்யநாதர:” என்கிறபடியே, வேறுபாடு இல்லாமல் இருக்கக்கூடிய பரம்பொருள், என்னோடே கலந்து அதனால் வந்த பிரீதிக்குப் போக்கு விட்டுப் புன்முறுவல் செய்து வேறுபாட்டினை அடையக்கூடிய பொருள் போலே வேறுபட்டவன் ஆகாநிற்க, நான் அவனைப் பிரிந்து வேறுபடாதவளாய் இருக்கவோ. 3ஒரு வார்த்தை சொல்லக்கூடியவன் அன்றிக்கே, முகம் பார்த்து வார்த்தை சொல்லுகைக்குத் தன்னோடு ஒப்பது ஒரு வேறுபொருள் இல்லாமையாலே அநாதரித் திருக்குமவன். 4‘கர்மங் காரணமாக வருகின்ற வேறுபாடு இல்லை’ என்ற இத்தனை போக்கி, அடியார்களோடு கலத்தலாலும் பிரிதலாலும் வருகின்ற வேறுபாடு இல்லை எனில், ஒரு சேதனனோடு கலந்தது அன்றிக்கே ஒழியுமே அன்றோ. 5அவன் கலந்தபோது செய்த புன்முறுவல் அன்றோ என்னை மறைவு அற்ற வழி

____________________________________________________

1. “மாசறு சோதி” என்பதனை நிகழ்கால வினைத்தொகையாகக் கொண்டு
  பொருள் அருளிச்செய்கிறார் ‘நான் மடல் எடுக்க நினைத்த’ என்று
  தொடங்கி.

2. இது, சாந்தோக்யம். 3 : 14. “செய்யவாய்” என்பதனால், சிவப்புத் தோற்றுவது
  புன்முறுவல் செய்யும்போது ஆதலின், ‘புன்முறுவல் செய்து’ என்கிறார்.

3. “அவாக்யநாதர:” என்று மேற்காட்டிய சுருதிக்குப் பொருள்
  அருளிச்செய்கிறார் ‘ஒரு வார்த்தை’ என்று தொடங்கி.

4. ஆயின், “அவிகாரய” என்று சுருதியோடு முரண் ஆகாதோ? என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘கர்மங்காரணமாக’ என்று தொடங்கி.

5. நன்று; பிரிவுக் காலத்திலே புன்முறுவல் கூடுமோ? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘அவன் கலந்த போது’ என்று தொடங்கி.