|
ய
யாகிய மடல் எடுக்கையிலே
மூட்டிற்று. 1சம்சாரி முத்தன் ஆவானே ஆனால் அவனுக்குப் பிறக்கும் உவகை போலே
காணும் இத்தலையைப் பெற்று அவன் புன்முறுவல் பூத்து நின்ற நிலை. என் செய்ய வாய் மணிக் குன்றத்தை-2இவளுடனே
கலந்ததனால் உண்டான பிரீதியாலே புன்முறுவல் பூத்து வடிவிலே வேறுபாடு தோற்ற நின்ற நிலை ஆயிற்று
இவளைக் கையும் மடலுமாம்படி தொட்டுவிட்டது. வாய்க்கரையிலே நின்று மடல் எடுக்கிறாள்; கழுத்துக்கு
மேலே அன்றோ இவள் மடல் எடுக்கப் பார்க்கிறது. மணிக்குன்றத்தை - மாணிக்க மலை போன்று இனியன்
ஆனவனை. அதாவது, 3‘கழுத்துக்கு மேலே அன்றிக்கே, மெய்யே மடல் எடுக்கச் செய்துவிட்டது
என்கிறாள். என்றது, 4என்னோடே வந்து கலந்ததனாலே வடுவில் வைவர்ண்யம் போய்ப்
புகர்த்துக் குளிர்ந்து நிலைபெற்றபடியும், பிரிவை நினைத்துக் கால் வாங்க மாட்டாதே நின்ற நிலையுங்காண்
என்னை மடலிலே துணியப் பண்ணிற்று என்கிறாள் என்றபடி.
ஆசு அறு சீலனை -
குற்றம் அற்ற சீலத்தையுடையவனை, என்றது, 5அவன் கலக்கிறபோது என்பேறாகக்
_____________________________________________________
1. மேலே, ‘வேறுபடாதவன்
புன்முறுவல் செய்து வேறுபட்டவனானான்’
என்றதனை, ஒரு திருஷ்டாந்தமூலம் விளக்குகிறார் ‘சம்சாரி
முக்தன்
ஆவானே ஆனால்’ என்று தொடங்கி.
2. “என் செய்ய வாய்” என்றதனோடு
“மணிக்குன்றத்தை” என்றதனையும்
கூட்டி, “செய்ய வாய்” என்பதற்கு, வேறும் ஒரு பாவம் அருளிச்செய்கிறார்
‘இவளுடனே’ என்று தொடங்கி. தொட்டுவிட்டது-ஈடுபடுத்திற்று.
‘வாய்க்கரையிலே’ என்றது, சிலேடை;
எல்லைக் கரை என்றும்,
திருவதரத்திலே என்றும் பொருள். ‘கழுத்துக்குமேலே’ என்றதும் சிலேடை:
கழுத்துக்கு மேலே இருக்கிற திருவதநம் என்றும், மனத்தொடு படாமல்
என்றும் பொருள்.
3. ‘கழுத்துக்கு மேலே’ என்றது,
சிலேடை: ‘மெய்யே’ என்றதும், சிலேடை:
திருமேனி என்றும், சத்தியம் என்றும் பொருள்.
4. “மணிக்குன்றம்” என்றதற்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘என்னோடே’
என்று தொடங்கி. வைவர்ணயம்-பிரிவுக்காலத்தில் உண்டாகும்
நிற
வேறுபாடு. “குன்றம்” என்றதனை நோக்கி ‘நிலை பெற்றபடியும்’ என்று
தொடங்கி அருளிச்செய்கிறார்.
5. சீலத்துக்குக் குற்றமாவது,
பிறர் பொருட்டுச் சேர்தல். குற்றம் இன்மையாவது,
தன் பேறாகச் சேர்வது. இதனை விரித்து
அருளிச்
|