| ன 
னான கிருஷ்ணனே! 
1ஒரு தாயினுடைய மெய்க்குப் போகமாட்டாத நீயோ என்னுடைய பொய்க்குப் போகப் 
புகுகிறாய், ஓர் ஆய்ச்சி கையிலே கட்டுண்ட நிலையிலே அந்தத் தளையினின்றும் தப்ப விரகு அறியாதே 
சத்தியும் இன்றிக்கே இருந்த நீயோ போகப்புகுகிறாய்? 2ஆர்ஜவமான கட்டை அவிழ்க்க 
மாட்டாதவன் பொய்யான பந்தத்தை அவிழ்க்கமாட்டான் என்றபடி. இனிப் போனால் அறையோ - இனிப்போனாயாகில் 
அறையோ அறை. 3என் பக்கலிலே ‘மெய்’ என்று பெயர் இடலாவது ஒரு பொய் பெற்ற 
பின்பு போனாயாகில் அறையோ அறை.4 பகவானுடைய கிருபையைப் பக்கபலமாகக் கொண்டு 
ஈச்வரனுடைய ஸ்வாதந்தரியத்தை அறைகூவுகிறார். ‘கண்ணபிரான்’ என்பது, விளிப்பெயர். அன்றிக்கே, 
கண்ணபிரானானவன் இனிப்போனால் அறையோ அறை என்று பொருள் கொண்டு முன்னிலைப் படர்க்கையாகக் 
கோடலுமாம். 
(1) 
444 
        போனாய் மாமருதின் 
நடுவே! என்பொல் லாமணியே!தேனே! இன்னமுதே! என்றேன் 
றேசில கூத்துச் சொல்லத்
 தானேல் எம்பெருமான் 
அவன் என் னாகி ஒழிந்தான்
 வானே மாநிலமே மற்றும் 
முற்றும் என் னுள்ளனவே.
 
_______________________________________________ 
1. “கண்ணபிரான்” என்றதற்கு, 
பாவம் அருளிச்செய்கிறார் ‘ஒரு தாயினுடைய’என்று தொடங்கி. என்றது, ஒரு தாயினுடைய சரீர சம்பந்தம் 
அடியான
 அன்புக்கு விட்டுப் போகாத நீயோ என் மனத்தொடு படாத சொற்களுக்கு
 விட்டுப் போகப் 
புகுகிறாய் என்றபடி.
 
 2. ஆர்ஜவமான-நேர்மையான.
 
 3. “இனி” என்றதற்கு, 
பாவம் அருளிச்செய்கிறார் ‘என் பக்கலிலே’ என்று
 தொடங்கி. ‘மெய் என்று பெயரிடலாவது ஒரு 
பொய்’ என்றது, ஈச்வரன்
 நினைவாலே. “அறை” என்பது, வென்றவன் சொல்லும் வார்த்தை என்பர்
 அரும்பத உரைகாரர்.
 
 “நிறையோத நீர் 
நின்று நீடவமே செய்யினும் வாழி நீலம்
 அறையோ அரிவை வரிநெடுங் 
கண் ஒக்கிலையால் வாழி நீலம்”
 
 என்பது சிந். 2514.
 
 4. ‘ஸ்வதந்திரனான 
ஈச்வரனை இப்படி அறை கூவுவது எதனைக் கொண்டு?’
 என்ன, ‘பகவானுடைய’ என்று தொடங்கி அதற்கு விடை 
அருளிச்செய்கிறார்.
 |