| New Page 1 
    பொ-ரை : 
- பெரிய இரட்டை 
மருதமரங்களின் நடுவே போனவனே! துவாரம் செய்யப்படாத என் மாணிக்கமே! தேனே! இனிய அமுதமே! 
என்று என்று சில கூத்துக்களைச் சொன்னேன்; சொல்ல, எம்பெருமானாகிய அவன்தான் செய்தபடி என்? 
என்னில், அவன், நான் இட்டவழக்கு ஆனான்; ஆகாயம் என்ன, பூமி என்ன, மற்றுமுள்ள பூதங்கள் என்ன, 
இவை எல்லாம் என்பக்கலிலே ஆய்விட்டன.
 வி-கு :
பொல்லல் - தொளைசெய்தல். கூத்து - ஒருவர் செயலை மற்றொருவர் அநுசரித்தல். பொய் என்னலுமாம். 
பன்னீராயிரப்படி உரைகாரர் ‘கூற்று’ என்ற பாடத்தைக் கொண்டுள்ளார்.
 
 ஈடு : 
இரண்டாம் பாட்டு.
1அஸத்தானே பய சங்கிகள் சொல்லும் வார்த்தையை நான் மனத்தோடு படாமலே 
சொல்ல, முற்றறிவினனான சர்வேச்வரன் அதனை மெய்யாகக் கொண்டு தன் விபூதியோடேகூட நான் இட்ட 
வழக்கு ஆனான் என்கிறார்.
 
 ஈடு :- 
இரண்டாம் பாட்டு. 1அஸத்தானே பய சங்கதிகள் சொல்லும் வார்த்தையை நான் மனத்தோடு 
படாமலே சொல்ல, முற்றறிவினனான சர்வேச்வரன் அதனை மெய்யாகக் கொண்டு தன் விபூதியோடேகூட நான் 
இட்ட வழக்கு ஆனான் என்கிறார்.
 
 மா மருதின் நடுவே 
போனாய்-2 அப்போது கண்டு நின்ற யசோதைப்பிராட்டியானவள், இரட்டைமருத மரங்கள் 
நடுவே அவன் போனபடியைக் கண்டு பாவபந்தம் தோற்றச் சொன்ன வார்த்தையை அது இல்லாத நான்
 
______________________________________________ 
1. அஸ்த்தானே 
பயசங்கிகள் - பயப்பட வேண்டாத இடத்திலும் அச்சத்தாலேசங்கை கொள்ளுகின்றவர்கள். சங்கை 
- ஐயம். அஸ்த்தானே பயசங்கை
 பண்ணுமவர்கள் என்பதற்கு,
 
 உறகல் உறகல் 
உறகல் ஒண்சுடர் ஆழியே! சங்கே!
 அறஎறி நாந்தக 
வாளே! அழகிய சார்ங்கமே! தண்டே!
 இறவு படாமல் இருந்த 
எண்மர் உலோக பாலீர்காள்!
 பறவை அரையா! 
உறகல் பள்ளியறை குறிக்கொண்மின்.
 
 என்ற பெரியாழ்வார் திருமொழிப் 
பாசுரத்தைப் பிரமாணமாகக் கொள்க.
 ஈச்வர விஷயத்தில் தமக்கு அன்பு போராமையாலே, பயப்படவேண்டிய
 இடத்திலே பயத்தால் சங்கை கொண்ட யசோதைப் பிராட்டியை இங்கு
 ‘அஸ்த்தானே பய சங்கியை’ என்கிறார்.
 
 “சில கூத்துச் 
சொல்ல” என்றதனை நோக்கி, ‘மனத்தொடு படாமலே
 சொல்ல’ என்றும், “தானேல் எம்பெருமான்” என்றதனே 
நோக்கி,
 ‘முற்றறிவினனான சர்வேச்வரன்’ என்றும், “வானே மாநிலமே” என்பன
 முதலானவைகளை நோக்கி, 
‘தன் விபூதியோடே’ என்றும், “என்னாகி”
 என்றதனை நோக்கி, ‘நான் இட்ட வழக்கானான்’ என்றும் 
அருளிச்
 செய்கிறார்.
 
2. அப்போது - 
மருதின் நடுவே போனபோது. |