பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
11

New Page 1

சொன்னேன். 1தெளிந்த ஞானத்தாலே, ‘இறந்தகாலம்’ என்று இவர்க்குத் தோற்றுகிறது இல்லையாயிற்று. 2சர்வேச்வரன் செய்து கொடுத்த தெளிந்த ஞானம் வயிறு எரிகைக்கு உடலாய் விட்டதித்தனை. பெரிய வடிவுகளையுடைய அசுரர்கள் மரங்களாய் நின்றார்கள் ஆதலின் ‘மா மருது’ என்கிறார். 3இவனுடைய இளமையை அறிந்து, பெருத்துத் தடித்துக் காட்சிக்கு இனிய வேஷத்தோடே ஆயிற்று இருவரும் கிருதசங்கேதராய்ச் சிறிதும் வெளி இடம் இல்லாதவாறு நின்றபடி. 4ஒன்றிலே வெளிகண்டு போனாற்போலே போனான் ஆதலின் ‘நடுவே’ என்கிறார். 5“மருத மருதங்களின் நடுவே சென்றார்” என்ற ஆபத்தை ஆயிற்றுச் சொல்லுகிறது. என் பொல்லா மணியே- 6“அதன்பின்

 

_______________________________________________

 

1. ‘அப்பொழுது அண்மையிலிருந்து கண்ட யசோதைப் பிராட்டி சொன்ன
  வார்த்தையைப் பிற்காலத்தவரான இவர் “போனாய்” என்று சொல்லுவது
  எப்படி?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘தெளிந்த ஞானத்தாலே’
  என்று தொடங்கி.

2. அங்ஙனமாயின், அநுபவிக்கலாமே? எனின், ‘சர்வேச்வரன்’ என்று தொடங்கி
  அதற்கு விடை அருளிச்செய்கிறார். ஆக, இதனால், தெளிந்த ஞானத்தாலே
  சமகாலம் போன்று தோற்றி வயிறு எரிகைக்குக் காரணமான தன்மை தமக்கு
  உண்டாயிருக்கவும், தம்முடைய நைச்சிய அநுசந்தானத்தாலே தமக்கு அன்பு
  இல்லை என்று அருளிச்செய்கிறார் என்று கொள்க.

3. ‘அசுரர்கள் மருத மரங்களாக நின்றது எதற்கு?’ என்ன, ‘இவனுடைய’ என்று
  தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். கிருதசங்கேதர் - தாங்கள்
  நினைத்த காரியத்தைச் செய்வதில் ஒற்றுமைப்பட்ட உணச்சியையுடையவர்கள்.

4. “மருது” என்று ஒருமையிலே அருளிச்செய்ததற்குக் கருத்து
  அருளிச்செய்கிறார் ‘ஒன்றிலே’ என்று தொடங்கி.

5. ‘நடுவே செல்லுதல் ஆபத்திற்குக் காரணம் ஆமோ?’ என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘மருத மரங்கள்’ என்று தொடங்கி.

 

  ‘வ்யக்ராயாம் அத தஸ்யாம் ஸ கர்ஷமாண உலூகலம்
  யமளார்ஜூந யோர்மத்யே ஜகாம கமலேக்ஷண:.”

  அந்த யசோதை வீட்டுக் காரியத்தில் நினைவுடனிருக்கும்போது தாமரைக்
  கண்ணனான அந்தக் கிருஷ்ணன் உரலை இழுத்துக்கொண்டு மருத
  மரங்களின் நடுவே சென்றார் என்பது இதன் பிண்டப் பொருள். இது, ஸ்ரீ
  விஷ்ணு புரா. 5. 6 : 16.

6. “தத: கடகடா சப்த சமாகர்ணந தத்பர:
  ஆஜகாம விரஜஜநோ தத்ருசே ச மஹாத்ருமௌ.”

  என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 6 : 18.