|
இ
இருக்கும். “சீலம் இல்லாச்
சிறியன்” என்ற திருவாய் மொழியிலே கூப்பிட்டார்; கூப்பிடச் செய்தேயும் வந்து முகங்காட்டாமையாலே,
அவனுக்கு உறுப்பு அல்லாத ஆத்மாவையும் 1ஆத்மாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களையும்
எனக்கு வேண்டா என்றார்; இப்படி ஒழியப் புறம்பே பேறு இழவுமாய் இருக்கிற சம்சாரிகள்படியைக்
கண்டு வெறுத்தார்; ‘ஈச்வரனும் கைவாங்கிய இவர்களை நான் திருத்துவேன்’ என்று, பகவானுடைய பரத்துவத்தை
எடுத்துச் சொல்லித் திருத்தினார்; ‘இவர்களிலே ஒருவனாக இருக்கிற எனக்கு இவ்வாசி உண்டாவதே!’
என்று பகவானுடைய கிருபையைக் கொண்டாடினார்; தாம் திருத்தத் திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய கூட்டத்திற்கு
மங்களாசாசனம் செய்தார்; தொடங்கின காரியம் முடிந்தவாறே பழைய இழவே தலை எடுத்து, தம் ஆற்றாமையாலே
மடல் ஊர்ந்தாகிலும் பெறப் பார்க்கிறார் என்னுதல். அன்றிக்கே, மேலே, “மலியும் சுடர் ஒளி
மூர்த்தி” என்று வடிவழகை அநுசந்தித்தார், பின்பு புறக்கலவியை விரும்பினார், அப்போதே பெறாமையாலே,
2வழி அல்லா வழியே மடல் ஊர்ந்தாகிலும் பெறப் பார்க்கிறார் என்னுதல்.
மாசறு சோதி . .
. . . . என் செய்யுமே - 3என் செய்யவாய் மாசறு சோதி மணிக்குன்றத்தை என்று சேர்த்துக்
____________________________________________________
வேண்டும்’ என்று பிரார்த்திக்க,
அவருக்காக அருளிச்செய்கிறார் ‘மேல்
திருவாய்மொழியில்’ என்றது முதல் ‘என்று அருளிச்செய்வர்’
என்பது முடிய.
1. ஆத்மாவோடு சம்பந்தப்பட்ட
பொருள்களையும் எனக்கு வேண்டா’ என்றது,
“ஏறாளும் இறையோனும்” என்ற திருவாய் மொழியில்.
‘வெறுத்தார்’ என்றது,
“நண்ணாதார்” என்ற திருவாய் மொழியில். ‘திருத்தினார்’ என்றது, “ஒன்றும்
தேவும்” என்ற திருவாய் மொழியில். ‘கிருபையைக் கொண்டாடினார்’ என்றது,
“கையார் சக்கரத்து”
என்ற திருவாய்மொழியில். ‘மங்களாசாசனம் செய்தார்’
என்றது, “பொலிக பொலிக” என்ற திருவாய்மொழியில்.
தொடங்கின காரியம்
- சம்சாரிகளைத் திருத்துதல். ‘பழைய இழவே’ என்றது, “ஏறாளும்
இறையோனும்”
என்ற திருவாய்மொழியில் கூறிய இழவு.
2. வழியல்லா வழி - தம்முடைய
முயற்சி.
3. “என் செய்யவாய்” என்றது,
அவயவ சோபையை. “மாசறு சோதி” என்றது,
சமுதாய சோபையை. “மணிக்குன்றத்தை” என்றது, இவ்விரண்டற்கும்
ஆஸ்ரயமான விக்கிரஹத்தை என்னும் பொருள் விசேடம் தோற்றுகைக்காகச்
‘சேர்த்துக்கொள்வது’
|