பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
95

New Page 1

கொள்வது, ‘இனி, விசேஷணந்தோறும் ஒரு பொருள் சொல்லவேணும்’ என்னுமதனாலே சொன்னோம்” என்று அருளிச்செய்வர்.

    ஈடு :-
இரண்டாம் பாட்டு. 1ஊரவர் சொல்லும் பழி நம்மை என் செய்யப் புகுகிறது என்று நின்றாள் மேல்; இது என்ன வார்த்தை சொன்னாய் ஆனாய், எல்லாம் செய்தாலும் பழி நீக்கப்பட வேண்டுங்காண் என்ன, நான் ‘பழி நீக்கப்பட வேண்டா’ என்றேன் அல்லேன், பழி நீக்கப்படுதற்கு உரிய எல்லை கடந்தது காண் என்கிறேன் என்கிறாள்.

    ‘ஊரவர் கவ்வை 2இனி நம்மை என் செய்யும் தோழீ’ என்று, தன் வடிவழகைக் காட்டுகிறாள். இம்முதலடியில் உள்ள ‘இனி’ என்ற சொல்லின் பொருளைப் பாசுரத்தில் மேல் உள்ள மூன்று அடிகளும் விரிக்கின்றன. என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான், முன் செய்ய மாமை இழந்து மேனி மெலிவு எய்தி என் செய்ய வாயும் கரும் கண்ணும் பயப்பு ஊர்ந்த; ஊரவர் கவ்வை இனி நம்மை என் செய்யும் தோழீ என்று கூட்டுக. 3தோழி, தன் வாயாலே ‘மடல் ஊரக் கடவதன்று’ என்று விலக்கவும் கூட, உடம்பு வெளுத்தல் அவளுக்கும் ஒத்திருக்கையாலே, ‘இனி என்னை’ என்னாமல், ‘இனி நம்மை’

_____________________________________________________

  என்கிறார். இது போதியதாமோ? பதப்பொருள் அருளிச்செய்ய வேண்டாவோ?
  என்ன, ‘இனி, விசேஷணந்தோறும்’ என்று தொடங்கி அதற்கு விடை
  அருளிச்செய்கிறார்.

1. இரண்டாம் பாசுரத்திற்கு அவதாரிகை அருளிச்செய்கிறார் ‘ஊரவர்’ என்று
  தொடங்கி. ‘எல்லாம் செய்தாலும்’ என்றது, ஆற்றாமையாலே எத்தனை
  காலம் பாடு ஆற்றி இருந்தாலும் என்றபடி. ‘பழி நீக்கப்படுதற்குரிய எல்லை
  கடந்தது காண்’ என்றது, “என் செய்யும் ஊரவர் கவ்வை” என்றதனைத்
  திருவுள்ளம்பற்றி.

2. “இனி” என்று தன் வடிவைக் காட்டுகிறாள் என்றபடி. “இனி” என்றால்,
  வடிவைக் காட்டினதாமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இம்
  முதலடியில்’ என்று தொடங்கி. என்றது, மேல் உள்ள வைவர்ணியம்
  முதலியவைகளை “இனி” என்பது சுட்டுகிறது ஆகையாலே பொருளாற்றலால்,
  “இனி” என்பது, வடிவைக் காட்டுகிறது என்றபடி.

3. “நம்மை” என்றதனை, உளப்பாட்டுத் தன்மைப் பன்மையாகக் கொண்டு
  பொருள் அருளிச்செய்கிறார் ‘தோழி’ என்று தொடங்கி. அங்ஙனம்
  உளப்படுத்திக் கூறுவதற்குப் பிரமாணம் காட்டுகிறார் “தோழிமாரும்”
  என்று தொடங்கி. இது, திருவாய். 9, 9 : 5.