பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
96

என

என்கிறாள். தோழிமாரும் “எம்மின் முன் அவனுக்கு மாய்வராலோ” என்னக்கடவதன்றோ. 1“எனக்கு அவன் வேணும்’ என்னும் தலைவி; ‘இவளுக்கு அவன் வேணும்’ என்னும் தோழி என்னும் இதுவேயாயிற்று வாசி. 2தலைவியைக் காட்டிலும் தோழிக்கு ஆற்றாமை விஞ்சி இருக்கும்; அதற்குக் காரணம், தலைவனைப் பிரிகையால் உண்டான ஆற்றாமை மாத்திரமே தலைவிக்கு உள்ளது, தலைவி நோவுபடக் காண்கையாலும், தலைவியும் தலைவனுமாகச் சேர இருக்குமது காணப் பெறாமையாலும் தோழிக்கு இரட்டித்திருக்குமே அன்றோ.

    3
‘பெருமாளும் பிராட்டியுமான இருப்பிலே பிரிவு விளைந்தது’ என்று இளையபெருமாள் மஹாராஜர்க்கு அறிவிக்க, அவ்வார்த்தை செவியிலே படப்பட, பெருமாள் திருமேனியில் வைவர்ண்யம் இவர் உடம்பிலே மாறிற்றாயிற்று; “அத்யர்த்தம் நிஷ்பிரப :- இழந்திருந்த தன்மை வாசாமகோசரம்” பிராட்டியைப் பிரிகையில் உண்டான ஆற்றாமை அன்றோ பெருமாளுக்கு உள்ளது, பெருமாளுடைய ஆற்றாமையைக் காண்கையாலும், பிராட்டியும் பெருமாளுமாகச் சேர இருக்கக் காணப் பெறாமையாலும் மஹாராஜர்க்கு அவ்வளவன்றிக்கே, மிக்கிருக்குமே அன்றோ. ‘அர்த்தம்’ என்ற சொல் பொருளை உணர்த்தும் சொல்லாயிற்று. அதி அர்த்தமாவது, சொற்களைக் கடந்தது. என்றது, வாசாமகோசரம் என்றபடி. 4“நம் இருவர்க்கும்

____________________________________________________

1. உடம்பு வெளுத்தல் இருவர்க்கும் ஒத்திருந்தால் வாசி யாது? என்ன,
  ‘எனக்கு’ தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

2. மேற்கோள் காட்டிய பாசுரத்திலுள்ள “எம்மில்” என்பதற்கு, பாவம்
  அருளிச்செய்கிறார் ‘தலைவியைக் காட்டிலும்’ என்று தொடங்கி.

3. தோழிமார்க்கு ஆற்றாமை இரட்டித்திருப்பதற்கு மேற்கோள் காட்டுகிறார்
  ‘பெருமாளும்’ என்று தொடங்கி.

  “ஸ ஸ்ருத்வா வாநரேந்த்ரஸ்து லக்ஷ்மணேந ஈரிதம்வச :
   ததாஸீத் நிஷ்பிரப: அத்யர்த்தம் ராகு க்ரஸ்த இவ அம்சுமான்”

  என்பது, ஸ்ரீராமா. சுந். 35 : 36. இச்சுலோகத்திற்குப் பொருள், ‘பெருமாளும்’
  என்று தொடங்குவது. மாறிற்றாயிற்று - இங்கும் உண்டாயிற்று என்றபடி.
  சுலோகத்திலுள்ள “அத்யர்த்தம்” என்ற சொல்லின் பொருளை விளக்குகிறார்
  ‘அர்த்தம்’ என்று தொடங்கி.

4. அவள் உடம்பு வெளுப்பது தனக்காக என்று இவள் எப்படி அறிந்தாள்?
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் “நம் இருவர்க்