பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
97

சுக

சுகதுக்கங்கள் ஒன்றே” என்கிறபடியே, தனக்கும் தோழிக்கும் உள்ள சம்பந்தத்தை முன்னிட்டுக்கொண்டு ‘தோழி இனி நம்மை’ என்கிறாள். என்றது, ‘பழி’ என்று நீக்குதற்குப் பார்க்கிறவள் தன்னையும் பழி சொல்லுகிறாள் அன்றோ, “நம்மிருவர்க்கும் சுகதுக்கங்கள் ஒன்றே” என்றிருக்குமது அவளுக்கும் உண்டு ஆகையாலே.

    பழிக்கு அஞ்ச வேண்டாமல் இருப்பதற்கு நமக்கு இப்போது வந்தது என்? என்ன, என்செய்யத் தாமரைக்கண்ணன் என்னை நிறை கொண்டான் - 1‘என்னுடைய ஆத்மாவும் ஆத்மாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களும் நீ இட்ட வழக்கு அன்றோ’ என்கிற அகவாயில் தண்ணளி தோற்றும்படி வாத்சல்யத்தாலே குதறிச் சிவந்த தாமரையைப் போன்ற திருக்கண்களாலே குளிர நோக்கி ‘நானும் என்னுடைமையும் உன்னது’ என்று சொல்லுவாரைப் போலே வந்து இத்தலையிலுள்ள எல்லாச் செல்வத்தையும் கொள்ளைகொண்டு போனான். என்றது, எனக்குக் கொடுப்பவனைப் போலே இருக்க நோக்கி, என்னை உரி கூறை கொண்டு போனான் என்றபடி. 2சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாய் இருந்தன; “தூதுசெய் கண்கள் கொண்டு ஒன்று பேசி” என்னக்கடவதன்றோ. 3என்னை நிறை கொண்டான் - அவன் புருஷோத்தமனாய் இருக்கும் தன்

____________________________________________________

  கும்” என்று தொடங்கி. என்றது, சமானமான சுகதுக்கங்களையுடையவர்கள்
  ஆகையாலே உடம்பு வெளுக்கக்கூடும் என்றபடி.

      “த்வம் வயஸ்ய : அஸி ஹ்ருத்ய: மே ஹி ஏகம் துக்கம் சுகஞ்ச நௌ”
  என்பது, ஸ்ரீராமா. கிஷ். 5 : 35. இது, சுக்கிரீவன் கூற்று.

1. “என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான்”
  என்பதற்கு, ‘தான் என்னுடையவன்’ என்னும் ஆகாரம் தோற்றும்படி
  கண்களாலே குளிர நோக்கி என்னுடைய எல்லாச் சொத்துகளையும்
  கொள்ளை கொண்டான் என்று பொருள் கூறத் திருவுள்ளம்பற்றி
  அருளிச்செய்கிறார் ‘என்னுடைய’ என்று தொடங்கி. இப்பொருளில், “நிறை”
  என்ற சொல்லுக்கு, ‘நிறைய’ என்றாய், எல்லாவற்றையும் என்பது பொருள்.
  “செய்யத் தாமரைக் கண்ணன்” என்றது, இப்போது, வாத்சல்ய குணத்திலே
  நோக்கு. உரி கூறை கொண்டு - கூறையை உரிஞ்சிக்கொண்டு. கூறை -
  புடைவை.

2. இதனால், அவனுடைய கொடுமையைக் காட்டுகிறார் ‘சொல் ஒன்றும்’ என்று
  தொடங்கி. அதற்குப் பிரமாணம் காட்டுகிறார் “தூது செய்” என்று. இது,
  திருவாய். 9. 9 : 9.

3. “செய்யத் தாமரைக் கண்ணன்” என்பதற்கு, பரத்துவ பரமாகப் பொருள்
  அருளிச்செய்யத் திருவுள்ளம்பற்றி, அதனையே திருஷ்