பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
1

ஸ்ரீ

ஆறாம் பத்து

முதல் திருவாய்மொழி-“வைகல்”

முன்னுரை

    ஈடு :- முதற்பத்தால், பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்று அறுதியிட்டார்; இரண்டாம்பத்தால், அந்தக் கைங்கர்யத்தில் களையறுத்தார்; மூன்றாம்பத்தால், களையறுக்கப்பட்ட அந்தக் கைங்கர்யமானது பாகவதசேஷத்வ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் என்றார்; நான்காம்பத்தால், இப்படிப்பட்ட கைங்கர்யத்திற்கு விரோதிகள் ஐசுவர்ய கைவல்யங்கள் என்றார்; ஐந்தாம்பத்தால், அந்த விரோதிகளைப் போக்குவானும் அவனே என்றார்; விரோதிகளை அழிக்கும் இயல்பினனான சர்வேசுவரன் திருவடிகளிலே சரண்புகுகிறார் இந்த ஆறாம்பத்தால்.

    1
மேல் “நோற்றநோன்பு” என்ற திருவாய்மொழி தொடங்கி நான்கு முறை சரணம்புக்க இடத்திலும் தம் அபேக்ஷிதம் பெற்றிலர். பலத்தோடு சம்பந்திப்பிக்கிறதாய் விரைவில் பலத்தைக் கொடுக்கக் கூடியதான உபாயத்தைப் பற்றியிருக்கச்செய்தேயும் அபேக்ஷிதம் கிட்டாது ஒழிவான் என்? என்னில், ஆழ்வாருடைய ஹிதத்தைப்

 

1. மேல் திருவாய்மொழிகளிற் கூறிய பொருள்களோடு இத்திருவாய்மொழியிற்
  கூறும் பொருளினைத் தொடர்புபடுத்திக் காட்டுகிறார் “மேல் ‘நோற்ற
  நோன்பு’” என்று தொடங்கி.

 
    ‘நான்குமுறை’ என்றது, “நோற்றநோன்பு”, “ஆராவமுதே”,
  ‘மானேய்நோக்கு”, “பிறந்தவாறும்” என்ற நான்கு திருவாய்மொழிகளிலும்
  சரணம் புக்கதைக் குறித்தபடி. ‘உபாயம்’ என்றது, பிரபத்தி உபாயத்தினை.