பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
2

New Page 1

போன்று உலகத்தினுடைய ஹிதத்துக்கும் கடவனாகையாலே 1ஈசுவர புத்தியாலே தலைக்கட்டிற்று இல்லை.

    2
உகந்தருளின நிலங்கள்தோறும் புக்குத் தட்டித் திரிந்தார், அங்குத் தாம் நினைத்தபடி பரிமாறப் பெற்றிலர்; நினைத்தபடி பரிமாறக்கூடிய அவதாரத்து ஏறப்போனார், அது சென்ற காலமாகையாலே கிட்டப்பெற்றிலர்; அதுதானே தளர்த்திக்குக் காரணமாயிற்று. 3இனி, எப்பொழுதும் அண்மையிலிருப்பதாய், முகப்பழக்கத்தாலும் குறையற்று, சக்தி குறைவுமின்றிக்கே இருக்கிற இவ்விடமே அமையும் என்று மீண்டார்; 4அந்த அநுசந்தானந்தான் கால்நடை தந்து போகாதபடி ஈடுபடுத்திற்று; கால்நடைதருவார் காலிலே விழுந்து தூதுவிடுகிறார். 5தாம் மேலே அநுசந்தித்த அவதாரம் தூதுவர்க்குச் சென்று அறிவிக்க ஒண்ணாதபடியாயிருந்தது; ‘இனி அறிவிக்கலாம் படி அண்மையில் நின்றானாகில் திருவண்வண்டூரிலே அறிவிப்போம்’ என்று அங்கே ஆள்விடுகிறார். 6இவர்க்குப் பிறந்தது ஞானத்தாலும்

 

1. ‘ஈசுவரபுத்தியாலே’ என்றது, இவருடைய பிரபந்தத்தைக் கொண்டு
  உலகத்தினைத் திருத்தவேண்டும் என்கிற ஈசுவரனுடைய நினைவினை.

2. மேல், பிராசங்கிகமாக வினாவை எழுப்பிக்கொண்டு அதற்கு விடையும்
  அருளிச்செய்தார். இனி, ‘மேல் நோற்ற நோன்பு’ என்று தொடங்கி மேலே
  அருளிச்செய்த வாக்கியத்தை விவரியாநின்றுகொண்டு
  இத்திருவாய்மொழிக்குச் சங்கதி அருளிச்செய்கிறார் ‘உகந்தருளின’ என்று
  தொடங்கி. ‘தட்டித் திரிந்தார்’ என்றது, ‘இந்தச் சரீரத்தோடு
  இருக்கச்செய்தே, குளிரநோக்குதல் அணைத்தல் வினவுதல் செய்ய
  வேண்டும்’ என்று திருப்பதிகள்தோறும் தடுமாறித் திரிந்தார் என்றபடி.

3. அர்ச்சாவதாரத்திலே மீளுகைக்கு மூன்று காரணங்களை அருளிச் செய்கிறார்
  ‘இனி, எப்பொழுதும்’ என்று தொடங்கி.

4. ஆயின், தாம் போகாமல் தூதுவிடுவான் என்? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘அந்த அநுசந்தானம்தான்’ என்று தொடங்கி. ‘அந்த
  அநுசந்தானம்’ என்றது, ‘எப்பொழுதும் அண்மையிலிருப்பதாய்’ என்று
  தொடங்கி மேலே அருளிச்செய்த திருவண்வண்டூரில் எம்பெருமானுடைய
  குணாநுசந்தானத்தை.

5. அவதாரத்தில் தூதுவிடாதே அர்ச்சாவதாரத்தில் தூதுவிடுவான் என்?
  என்ன, ‘தாம் மேலே’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

6. நினைத்த பரிமாற்றம் கிடையாவிட்டால் தூதுவிடவேண்டுமோ? ‘தலைவன்
  செய்தபோது கண்டிருக்கிறோம்’ என்று ஆறி இருக்க ஒண்ணாதோ? என்ன,
  விடை அருளிச்செய்கிறார் ‘இவர்க்கு’ என்று தொடங்கி.