கர
கர்மத்தாலும் உண்டான
பக்தி அன்றே! ஒருவன் திருவருள் அடியாக வந்ததன்றோ. 1தம் தலையிலேயும் ஒன்று உண்டாய்
‘அது நிரம்பிப் பெறவேணும்’ என்று இருக்கிலன்றோ விளம்பம் பொறுக்கலாவது, அங்ஙன் சொல்லலாவது
ஒன்று இன்றிக்கே இருந்தது. இவர்தாம் பற்றின சாதனந்தான் காலதாமதத்தைச் சகிக்கக்கூடிய தன்றே!
2வேறு உபாயங்களைக் காட்டிலும் கால்வாசி ஏற்றம் உண்டே! இங்ஙனே அடிப்பட்ட உபாயத்தைப்
பற்றினவர் ஆறியிருக்கமாட்டார் அன்றோ, ஆகையாலே, ஆற்றாமை கரைபுரண்டு ஆள்இட்டு அறிவிக்கிறார்.
3‘சரணம்
புக்கோமாகில் அத்தலையாலே பேறு ஆகுமளவும் ஆறியிருப்போம்’ என்று தரித்திருக்கவல்ல தன்மையரன்றே.
4பிரஹ்மாஸ்திரம் வாய்மடியச் செய்தேயும் இவர் தூதுவிடுகிற இது,
1. ஞானத்தாலும் கர்மத்தாலும்
உண்டான பக்தியானால் ஆறியிருத்தற்கும்,
பகவானுடைய திருவருள் அடியாக உண்டானதானால் ஆறியிருக்க
ஒண்ணாமைக்கும் காரணத்தை அருளிச்செய்கிறார் ‘தம் தலையிலேயும்’
என்று தொடங்கி.
2. மற்றைய உபாயங்களைக்
காட்டிலும், பிரபத்தியானது விரைவில் பலன்
கொடுக்கக்கூடியது என்னும் ஏற்றத்தை அருளிச்செய்யாநின்று
கொண்டு,
இப்படிப்பட்ட உபாயத்தைப் பற்றியவராகையாலும் ஆறியிருக்கமாட்டார்
என்கிறார் ‘வேறு
உபாயங்களைக் காட்டிலும்’ என்று தொடங்கி. ‘கால்வாசி’
என்றதற்கு, “சரணௌ” என்றதிலே
நோக்கு. ‘ஆகையாலே’ என்றது,
பக்திக்குப் பரவசப்பட்டவராய், சித்தோபாயத்தைப் பற்றினவரும்
ஆகையாலே என்றபடி.
3. தமது தன்மையாலும்
ஆறியிருக்கமாட்டார் என்று, மூன்றாவதாக வேறும்
ஒரு காரணத்தை அருளிச்செய்கிறார் ‘சரணம்
புக்கோமாகில்’ என்று
தொடங்கி.
4. நான்குமுறை பிரபத்திசெய்தும்
பெறாதவர், தூதுவிடுகிறது என்? என்ன,
‘பிரஹ்மாஸ்திரம்’ என்று தொடங்கி விடை அருளிச்செய்கிறார்.
‘பிரஹ்மாஸ்திரம்’ என்றது, பிரபத்தியை. ‘ஞானகாரியமோ சாபலகாரியமோ
தெரிகிறது இல்லை’ என்றது,
‘பிரபத்தி செய்தும் வாராதவன், தூதுவிட்டால்
வாரான்’ என்ற விவேகம் இன்றிக்கே, மீளவும்
தூதுவிடுகையாலே
ஞானகாரியம் என்று நிச்சயிக்கப் போகாது; அவன் வருகைக்குக்
காரணமான குணங்களிலே
உண்டான அத்யவசாயம் நெஞ்சிலே
கிடக்கையாலே சாபலகார்யம் என்றும் நிச்சயிக்கப்போகிறது இல்லை
என்றபடி.
|