ஞ
ஞானகாரியமோ சாபலகாரியமோ
தெரிகிறது இல்லை; 1சுருதிகளும் கூட “அந்த ஆனந்த குணத்தினின்றும் வேதவாக்குகள்
மீண்டன” என்று பேச்சுக்கு நிலம்அன்று என்று மீண்ட விஷயத்தை மறுபாடு உருவப் பாசுரமிட்டுச்
சொல்லவல்ல இவர்க்கு ‘அறிவில்லை’ என்ன ஒண்ணாது; 2பறவைகளின் காலிலே
விழுகிற இவர்க்கு ‘அறிவுண்டு’ என்னவும் ஒண்ணாது. ஆனால், என்னாவது? ஏது? என்னில், ஞானகாரியமான
சாபலமன்றோ இவரது. 3இதர விஷயங்களில் விரக்தியன்றோ ஞானத்திற்குப் பிரயோஜனமாகச்
சொல்லுகிறது, சாபலம் ஞானகாரியம் என்று சொல்லுகிறபடி யாங்ஙனம்? எனின், அந்த ஞானபலமாயன்றோ
இவ்விஷயத்தில் சாபலம் இருப்பது. ஞானத்துக்கும் வைராக்கியத்துக்கும் சேர்விடமாய் இருப்பவர்
அன்றோ இவர். 4இனி, தூதுவிடப் பார்த்தால் ஒரு ஐந்திரவியாகரண பண்டிதனைத்
தூதுவிடுகிறது மன்றே. இத்தால் சொல்லுகிறது, பிராட்டியில் உண்டான ஏற்றமோ? என்னில், அதுவும்
உண்டு அன்றோ, 5அவர் ஒருவரையும் அநுபவிக்கையால் வந்ததன்றோ அவளுக்கு உள்ளது,
இருவரையும்கூட அதுபவிக்கக் கோலுகிற ஏற்றம் உண்டன்றோ இவளுக்கு. விஷயத்துக்குத் தகுதி
1. இரண்டு காரியமும் இன்றிக்கே,
அஜ்ஞானத்தின் காரியம் என்றாலோ?
எனின், அதுவும் ஒண்ணாது என்று அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘சுருதிகளும்’ என்று தொடங்கி.
“யதோ வாசோ நிவர்த்தந்தே
அப்ராப்ய மநஸாஸஹ”
என்பது, தைத்திரீய ஆன.
9 : 1.
2. ஞானகாரியம்
என்ன ஒண்ணாமைக்கு, வேறும் ஒரு காரணத்தை
அருளிச்செய்கிறார் ‘பறவைகளின்’ என்று தொடங்கி.
3. ‘இதர விஷயங்களில்’
என்று தொடங்கும் வாக்கியம் வினா. இந்த
வினாவிற்கு விடை அருளிச்செய்கிறார் ‘அந்த ஞானபலமாயன்றோ’
என்று
தொடங்கி. என்றது, விரக்தியைப்போன்று பகவத் விஷயத்தில் சாபலமும்
ஞானபலம் என்றபடி.
‘அந்த ஞானபலம்’ என்றது, விரக்தி ஹேதுவான
ஞானபலம் என்றபடி.
4. பறவைகளின்
காலிலே விழுகிறது அஜ்ஞானத்தின் காரியம் என்னுமதனை
நியாயங்காட்டி விவரிக்கிறார் ‘இனி,
தூதுவிட’ என்று தொடங்கி. ‘இத்தால்’
என்றது, ஐந்திர வியாகரண பண்டிதனை விடாமல், பறவைகளைத்
தூது
விடுகிற இதனால் என்றபடி. ஏற்றம் - அன்பின் மிகுதி.
5. ‘அவர்
ஒருவரையும்’ என்றது, ஸ்ரீராமபிரானை. ‘இருவரையும்’ என்றது,
பெருமாளையும் பிராட்டியையும். இவளுக்கு-ஆழ்வார்
நாயகிக்கு.
|