ய
யாகவன்றோ கலக்கம்
இருப்பது. 1இனித்தான், அத்தலையில் நின்றும் வந்தார்க்கே வார்த்தை சொல்லிவிடவேண்டும்
என்னும் நிர்ப்பந்தம் இல்லையே இவளுக்கு; இராவணசங்கை இல்லாமையாலே. ஆகையாலே, கண்களால் கண்டாரையடங்கலும்
போகவிடுகிறாள்.
2பிரிந்தார்
இரங்குவது நெய்தல் நிலத்திலேயன்றோ; திருவல்லவாழ், திருவண்வண்டூர் என்பவை எல்லாம் அந்நிலங்கள்
அலவோ. தூதுவிடுவார், நாயகன்பக்கலிலே சிலகுணங்கள் கண்டன்றோ விடுவது. என்றது, இத்தலையில் துயரத்தையறியுந்துணை
அறிவையுமுடையனாய், அறிந்தால் வருகைக்குத் தகுதியான சக்தியுமுடையனாயிருக்கவேண்டுமன்றோ என்றபடி.
அவையெல்லாம் இவள் தூதுவிடுகிற விஷயத்தில் குறைஇல்லை. அறிவில் வந்தால் 3“ஞான
சம்பந்ந:” என்கிறபடியே, அறிவு கொடுத்த வசிஷ்டர் முதலானோர்கட்கும் கொடுக்கவல்லனாம்படி
இருப்பான் ஒருவன். நீர்மையில் வந்தால் 4“பகைவர்களிடத்தும் அன்புள்ளவன்” என்றால்
5“கண்ணீரோடு கூடினவர்” என்னும்படியன்றோ அது இருப்பது. சக்தியில்
1. பிராட்டியில் ஏற்றம்
உண்டு என்கைக்குக் காரணத்தை அருளிச் செய்யத்
திருவுள்ளம்பற்றி, இருவருடைய எண்ணங்களையும்
அருளிச் செய்கிறார்
‘இனித்தான்’ என்று தொடங்கி. அத்தலை - தலைவன்.
2. போக்கெல்லாம்
பாலை, புணர்தல் நறுங்குறிஞ்சி,
ஆக்கம்சேர்
ஊடல் அணிமருதம் - நோக்குங்கால்
இல்லிருக்கை
முல்லை, இரங்கல் நறுநெய்தல்
சொல்விரிந்த நூலின் தொகை.
என்னும் பழம்பாடல் இங்கு
நினைவு கூர்க.
‘திருவல்லவாழை’
இங்கு எடுத்தது, அங்குப்போலே திருவண்வண்டூரிலும்
புறச்சோலையளவும் போய் அங்கே விழுந்து கிடந்து
தூது விடுகிறாள்
என்கைக்காக.
3. “யஸஸ்வீ ஜ்ஞாநஸம்பந்ந:
சுசி: வஸ்ய: ஸமாதிமாந்”
என்பது, ஸ்ரீராமா. பால. 1
: 12.
4. “தேவகல்பம்
ருஜும் தாந்தம் ரிபூணாமபிவத்ஸலம்”
என்பது, ஸ்ரீராமா. அயோத்.
21 : 6.
5. ‘“கண்ணீரோடு
கூடினவர்” என்னும்படியன்றோ அது இருப்பது’ என்றது,
அநுஷ்டான பர்யந்தமாம்படியன்றோ அது இருப்பது
என்றபடி.
“ஸம்ஜாத
பாஷ்ப: பரவீரஹந்தா ராமோ முஹூர்த்தம்
விமநா பபூவ”
என்பது, ஸ்ரீராமா. கிஷ்.
23 : 24.
|