பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
6

வந

வந்தால் 1“பராக்கிரமத்தாலே மகிழச்செய்கின்றவனுக்கு” என்று எதிரிகள்பக்கலிலே கேட்கவேண்டுமத்தனை. 2இனித்தான், நாயகனாவான் அறிவு நிறை ஓர்ப்புக் கடைப்பிடி என்று மிக் குணங்களையுடையவன் அன்றோ, இத்தகைய குணங்களையுடையவன் வாராமைக்குக் காரணம், அவ்விடங்களிலே துன்புறுவார் பலர் உளராகையாலே அவர்கள் ரக்ஷணத்திலே ஒருப்பட்டு இத்தலையை மறந்தானித்தனை; 3காத்தலைச்செய்ய ஒருப்பட்டால் “மறைந்து போன மற்றை எண்ணங்களையுடையதாய்” என்னும்படியன்றோ இருப்பது; ஆனபின்பு, துயரத்தை அறிவிக்க வருவான் என்று பார்த்தாள். 4இனி, அறிவித்தால் ஆர்த்திக்கு இத்தலையில் மேற்பட்டார் இன்றிக்கே இருக்குமன்றோ. 5அறிவிக்குமிடத்தில், தான்

 

1. “ஸத்ரோ: ப்ரக்யாத வீர்யஸ்ய ரஞ்ஜநீயஸ்ய விக்ரமை:”

  என்பது, ஸ்ரீராமா. யுத். 16 : 6.

      ‘எதிரிகள் பக்கலிலே கேட்கவேண்டுமத்தனை’ என்றதனை,
  கம்பராமாயணம் முதற்போர்ப் படலம், 203, 204-ஆம் செய்யுட்களிலும்,
  கும்பகர்ணன் வதைப்படலம், 15-முதல் 31-முடியவுள்ள செய்யுட்களிலும்,
  நாகபாசப் படலம், 120-ஆம் செய்யுளிலும், இந்திரஜித்து வதைப்படலம்,
  4-ஆம் செய்யுளிலும் கண்டு தெளிதல் தகும்.

      ‘எதிரிகள் பக்கலிலே’ என்றது, தன் வீரம் ஒழியப்பிறர் வீரத்தைச்
  சஹியாத இராவணன் பக்கலிலே என்றபடி.

      தலைவன் இலக்கணம் சொல்லும் இவ்விடத்தில் ஸ்ரீ ராமபிரான்
  விஷயமான பிரமாணங்களைக் காட்டியது, “ஏறு சேவகனார்க்கு” (செய். 10.)
  என்று தூதுக்கு விஷயம் ஸ்ரீராமபிரான் ஆகையாலே.

2. நூல்களில் சொல்லப்படுகின்ற தலைவன் இலக்கணமும் இந்தத் தலைவனுக்கு
  உண்டு என்கிறார் ‘இனித்தான்’ என்று தொடங்கி.

3. ரக்ஷணத்திலே ஒருப்பட்டால் இத் தலையை மறக்கவேண்டுமோ? என்ன,
  ‘காத்தலைச் செய்ய’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச் செய்கிறார்.

  “யத்விஸ்மயஸ்திமிதம் அஸ்தமிதாந்யபாவம்
   ஆநந்தமந்தம் அமிருதா ப்லவநாதிவ அபூத்”

  என்பது, மாலதீ மாதவ நாடகம்.

4. அங்கும் ஆர்த்தர் உளரே? என்ன, ‘இனி, அறிவித்தால்’ என்று தொடங்கி
  அதற்கு விடை அருளிச்செய்கிறார். ஆர்த்தி - துன்பம்.

5. தான் போகுதல், தோழிமாரைப் போகவிடுதல் செய்யாதே, பறவைகளைத்
  தூதுவிடுவான் என்? என்ன, ‘அறிவிக்குமிடத்தில்’ என்று தொடங்கி அதற்கு
  விடை அருளிச்செய்கிறார்.