|
த
தலைச்சுமையைக்
கழித்துப் போந்தோம்; இதுவும் ஒரு தலைச்சுமையாகின் செய்வது என்?’ என்று. 1இக்ஷ்வாகு
குலத்தார்க்குப் பணியன்றோ முடிக்கு இறாய்க்கை. 2அடிக்கு இறாயாதிருக்கையும் முடிக்கு
இறாய்க்கையுமன்றோ சொரூபம். 3‘அது கிடக்க; உங்களுடைய எண்ணங்களைக் குலைத்து உங்களை
வென்றோம் அன்றோ’ என்றான். இருபத்தொருகால் அரசு களை கட்ட வென்றி நீள் மழுவா - 4மிடுக்கரான
அரசர்களை இருபத்தொருபடிகால் வென்ற உனக்கு அபலைகளான எங்களை வெல்லுகை பெரிய பணியோ?
“எனக்கு” என்று இருப்பாரையும் உனக்கு ஆக்கிக் கொள்ளவல்ல உனக்கு உனக்கேயாய் இருப்பாரை
வெல்லுகை பெரிய ஏற்றமோ? இராஜாக்களை வென்ற உனக்கு ஆய்ச்சியர்களை வென்றாய் என்பது ஓர்
ஏற்றமோ? அசுரத்தன்மை வாய்ந்தவர்களாய் நாட்டினைப் பட அடித்துத் திரிந்த க்ஷத்திரிய குலத்தைக்
கிழங்கு எடுத்த மிடுக்கனே! களைகட்டுகையாவது - எடுத்துப் பொகடுகை.
1. ஸ்ரீ பரதாழ்வான் முடிக்கு
இறாய்த்தால், ஸ்ரீ விபீஷணாழ்வானும் முடிக்கு
இறாய்க்கவேண்டுமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘இக்ஷ்வாகு குலத்தார்க்கு’ என்று தொடங்கி.
குகனொடும்
ஐவரானேம் முன்பு; பின் குன்றுசூழ்வான்
மகனொடும் அறுவரானேம்; எம்முழை அன்பின் வந்த
அகனமர் காதல் ஐய! நின்னோடும் எழுவ ரானேம்;
புகலருங் கானந் தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை.
நடுவினிப் பகர்வ தென்னே நாயக! நாயி னேனை
உடனுதித் தவர்களோடும் ஒருவனென் றுரையா நின்றாய்
அடிமையிற் சிறந்தேன் என்னா அயிர்ப்பொடும் அச்சம் நீங்கித்
தொடுகழற்
செம்பொன் மௌலி சென்னியிற் சூட்டிக் கொண்டான்.
என்பன
அநுசந்தேயம்.
(கம். விபீட. 146, 147.)
2. அவர்கள் தாம் முடிக்கு இறாய்க்கைக்குக் காரணம் யாது? என்ன,
‘சொரூபஞானம் பிறந்த உரப்பு’
என்கிறார் ‘அடிக்கு இறாயாதிருக்கையும்’
என்று தொடங்கி.
3. ‘அது கிடக்க’ என்றது, “நின்று இலங்கு முடியினாய்” என்று என்னைக்
கொண்டாடுவது கிடக்க என்றபடி.
4. ‘உங்களை வென்றோம் அன்றோ’ என்றதற்கு, மூன்று வகையாக விடை
அருளிச்செய்கிறார்கள்
‘மிடுக்கரான’ என்று தொடங்கியும், ‘எனக்கு
என்றிருப்பாரையும்’ என்று தொடங்கியும்,
‘இராஜாக்களை’ என்று
தொடங்கியும். இம்மூன்றிலும், சரீரத்தாலும் மனத்தாலும் சாதி
காரணமாகவும்
வருகிற தோல்விகளைக் குறித்தபடி.
|