|
வ
வியன் ஞாலம் முன் படைத்தாய் - 1பிரளயத்தில் உருமாய்ந்து கிடந்த பூமியை உண்டாக்கினாற்
போலே அன்றோ, பிரணய ரோஷத்தாலே அழிந்த எங்களை உண்டாக்கினபடி. வியன் - ஆச்சரியம்.
2பிரளயம் கொண்ட பூமியை எடுத்தாற் போலே, விரஹ பிரளயம் கொண்ட எங்களை எடுத்தபடி.
3அங்கு விலக்குவார் இல்லாமையாலே செய்யலாம்; ‘கழக மேறேல்’ என்று விலக்கச்
செய்தேயன்றோ உண்டாக்கிற்று. இன்று இவ் வாயர் குலத்தை வீடு உய்யத் தோன்றிய கருமாணிக்கச்
சுடர் - 4“பல பொருள்களாக ஆகக்கடவேன்” என்று பொதுவான சிருஷ்டியைத் தேடிப் போக
வேணுமோ? இந்த ஆயர்குலத்திலே வந்து பிறந்து, இன்று இவ்வாயர்குலத்தை வடிவைக் காட்டி மனைவி மக்கள்
முதலியவர்களோடு ரக்ஷித்தவனாதலின் ‘கரு மாணிக்கச் சுடர்’ என்கிறார்கள். அன்றிக்கே,
தன்னை அடைந்தார் திறத்திற் பண்ணின ஓரம் தன்பேறு என்னுமிடம் வடிவிலே தோன்றும்படி காணும்
இருக்கிறது; ஆதலின், ‘கரு மாணிக்கச் சுடர்’ என்கிறார்கள் என்னுதல். அன்றிக்கே, பிரணயரோஷத்தாலே
‘சேரோம்’ என்று இருக்கிற தங்களைச் சேர்த்தபடியாலே ‘கருமாணிக்கச்சுடர்’ என்கிறார்கள்
என்னுதல். “புத்திர பௌத்திரர்களாகிய அடிமைப்பொருள்களோடு” என்கிறபடியே, ஒரு சேர உய்வுபெறும்படி
செய்தானாதலின் ‘வீடு உய்ய’ என்கிறது. தோன்றிய - ஆவிர்ப்பவித்த. நின்தன்னால்
என்றும் நலிவேபடுவோம்
1. தங்களுடைய பிரணயரோஷத்தைப்
போக்கிச் சேர்த்துக் கொண்ட படியைச்
சொல்லுகிற இடத்தில் படைத்தலைக் கூறியதற்கு, பாவம்
அருளிச்செய்கிறார்
‘பிரளயத்தில்’ என்று தொடங்கி.
2. இவர்களுக்கும் பிரளயம் உண்டு என்பதனைக் காட்டுகிறார், ‘பிரளயம்’
என்று தொடங்கி.
3. உலகத்தைப் படைத்தலைப் போன்று அத்துணை அருமை உண்டோ
இங்கு? என்ன, அதிலும் இங்கு அருமை
அதிகம் என்கிறார் ‘அங்கு’
என்று தொடங்கி.
4. “கரு மாணிக்கச் சுடர்” என்றதற்கு மூன்று வகையாக, பாவம்
அருளிச்செய்கிறார். தன் வடிவழகாலே
ஆயர்குலத்தை வசீகரித்தவன்
என்பது முதல் வகை. இதனை அருளிச்செய்கிறார் ‘பல பொருள்களாக’
என்று
தொடங்கி. ஆயர்குலத்தை உஜ்ஜீவிப்பித்த பின்பு அவன் வடிவு
புகர் பெற்றது என்பது இரண்டாவது
கருத்து. இதனை அருளிச்செய்கிறார்
‘தன்னை அடைந்தார் திறத்தில்’ என்று தொடங்கி. ஆயர்குலத்தை
உஜ்ஜீவிப்பித்தவனாய் எங்கள் பிரணயரோஷத்தை தீர்க்கையாலே
மாணிக்கச் சுடரானான் என்பது
மூன்றாவது கருத்து. இதனை
அருளிச்செய்கிறார் ‘பிரணயரோஷத்தாலே’ என்று தொடங்கி.
“கருமாணிக்கச்
சுடர்” என்றது, விளிப்பெயர்.
|