பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
15

    வி-கு :- நாராய்! பெருமானைக் கண்டு தொழுது அடியேன் திறம் பணியீர் என்க. பெடை - பெண்நாரை. கரு - என்றது, புணர்ச்சியால் உண்டாகும் அழகினை.

    ஈடு :- இரண்டாம்பாட்டு. 1துயர்உறுகின்றவர்களைப் பாதுகாப்பதில் உறுதி பூண்டிருப்பவனுக்கு என் ஆற்றாமையை அறிவி என்று ஒரு நாரையை இரக்கிறாள். ‘முன்பு போகவிட்டவர்கள் கொண்டு வருவார்கள்’ என்று கொண்டு ஆறியிருக்கலாம் விஷயமன்றே! அங்ஙனேயாகுமன்று முன்பு செய்த பிரபத்தியே அமையுமே.

    காதல் மென் பெடையோடு உடன் மேயும் கரு நாராய் - 2“நான் ஒருமாதத்திற்குமேல் ஜீவித்திருக்கமாட்டேன்” என்றால், 3“கண நேரத்திற்குமேல் நான் ஜீவித்திருக்கமாட்டேன்” என்பாரும் உண்டு ஆகாதே. 4கடக்க நின்று சொல்லளவேயாய்ப்போகாமல், அது தன்னை அநுஷ்டானபர்யந்தமாக்கித் தலைக்கட்டுவாரையும் கிடைப்

 

1. “கருநாராய்! ஞாலம் எல்லாம் உண்ட நம்பெருமானைக் கண்டு பணியீர்
  அடியேன் திறமே” என்றதனைக் கடாக்ஷித்து அவதாரிகை
  அருளிச்செய்கிறார். மேல்பாசுரத்தில் விட்ட தூது மீண்டு வருவதற்கு
  முன்னே, பின்னையும் தூது விடுவான் என்? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘முன்பு போகவிட்டவர்கள்’ என்று தொடங்கி.

2. “காதல்மென்பெடை” என்றதனையும், “உடன்மேயும்” என்றதனையும் கூட்டி,
  பாவம் அருளிச்செய்கிறார் ‘நான் ஒரு மாதத்திற்கு’ என்று தொடங்கி.

  “ஜீவிதம் தாரயிஷ்யாமி மாஸம் தசரதாத்மஜ
   ஊர்த்வம் மாஸாத் ந ஜீவிஷ்யே ஸத்யேந அஹம் ப்ரலீமி தே”

  என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 68.

  இன்னம் ஈண்டொரு திங்கள் இருப்பல்யான்
  நின்னை நோக்கிப் பகர்ந்தது நீதியோய்!
  பின்னை ஆவி பிடிக்கின்றிலேன் அந்த
  மன்ன னாணை இதனை மனக்கொள்நீ.

  என்பது, கம்பராமாயணம்.

3. “ந ஜீவேயம் க்ஷணமபி விநா தாம் அஸிதேக்ஷணாம்”

  என்பது, ஸ்ரீராமா. சுந். 66 : 10. ‘என்பார்’ என்றது, ஸ்ரீராமபிரானை.

4. தலைவன் ‘ஒரு கணநேரத்திற்குமேல் பிழைத்திருக்கமாட்டேன்’
  என்னவில்லையோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘கடக்க
  நின்று’ என்று தொடங்கி. ‘சொல்லளவேயாய்ப் போகாமல்’ என்றது,
  ‘கணநேரத்திற்குமேல் பிழைத்திருக்கமாட்டேன்’ என்ற சொல்லளவேயாய்ப்
  போகாமல் என்றபடி.