|
ப
பதே. 1முற்றறிவினர்களோடு
கலவாதொழியும்படியான புண்ணியத்தைச்செய்வதே நீங்கள் முன்னம். 2‘பின்பு கூடுதல்
தவிராதாகில் இப்போது பிரிந்தால் என்செய்யவேணும்’ என்று இருப்பர்கள் அன்றோ அவர்கள்; அத்தனை
காரியப்பாடு இல்லையன்றோ இவற்றுக்கு. நிரூபித்துப் பார்த்தால் 3காதலுக்கு அவ்வருகு
ஒன்று இன்றிக்கே யிருத்தலின் ‘காதல்பெடை’ என்கிறாள். என்றது, காதலை வடிவாகவுடைத்தாயிருக்கை.
4கலக்கவும் கூடப் பொறாத மிருதுத் தன்மையையுடைத்தாயிருத்தலின் ‘மென்படை’
என்கிறாள். கலக்கவும் பொறாதார்க்குப் பிரியப் பொறாது என்னுமிடம் சொல்லவேண்டாவே; அத்தாலே
கூடத் திரியாநின்றது என்பாள் ‘உடன்மேயும்’ என்கிறாள். 5பேடையின் காதல்
அறிந்து கூடத்திரியும் சேவலும் உண்டாகாதே. அன்றிக்கே, 6“இது பரிசுத்தமானது, இது
ருசியுள்ளது, இது நன்றாக அலர்ந்திருக்கிறது” என்கிறபடியே காணும் இது திரிகிறது.
1. “நாராய்!” என்ற அஃறிணைக்கு,
பாவம் அருளிச்செய்கிறார்
‘முற்றறிவினர்களோடு’ என்று தொடங்கி.
2. முற்றறிவினர்களோடு
கலந்தால் தோஷம் யாது? இதற்குக் குறை இல்லாமை
யாது? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘பின்பு கூடுதல்’ என்று
தொடங்கி.
3. ‘காதலுக்கு அவ்வருகு
ஒன்று இன்றிக்கே இருத்தலின்’ என்றது, காதலுக்கு
அப்பால் ஓர் ஆஸ்ரயம் இன்றிக்கே இருக்கையைத்
தெரிவித்தபடி.
4. ‘கலக்கவும் கூடப் பொறாத’ என்றது, புணர்ச்சிக்காலத்தில் விட்டு
அணைக்கவும் பொறாத என்றபடி.
“புல்லிக் கிடந்தேன்
புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு”
என்ற திருக்குறள் நினைவு
கூர்தல் தகும்.
5. பேடையினுடைய
காதலைச் சொன்னபின்பு “உடன்மேயும்” என்கிறவளுடைய
மனோபாவத்தை அருளிச்செய்கிறார்
‘பேடையின்’ என்று தொடங்கி.
6. “உடன்மேயும்”
என்பதற்கு, ஒருசேர வசிக்கும் என்ற பொருளை இதுகாறும்
அருளிச்செய்து, இனி, ஒருசேர உண்கின்ற என்ற
பொருளை
அருளிச்செய்கிறார் ‘இது பரிசுத்தமானது’ என்று தொடங்கி.
“இதம் மேத்யம்
இதம் ஸ்வாது ப்ரபுல்லம் இதம் இத்யபி
மதுலுப்த: மதுகர:
பம்பாதீரத்ருமேஷூ அஸௌ”
என்பது, ஸ்ரீராமா. கிஷ்கிந்.
1 : 88.
|