வ
விருப்பம்
இல்லாத அவன் கால் வாங்கிப்போகமாட்டாதே நின்ற நிலைக்குத் தியோதகம். அப்பன் தன்னை -
1அந்த நிலையைக் காட்டிச் சேர்த்துக்கொண்டு தம்மை உண்டாக்கினபடி.
குருகூர்ச் சடகோபன் ஏத்திய தமிழ் மாலை - 2பிரணயரோஷத்தாலே “போகு நம்பி” என்றும்,
“கழகம் ஏறேல் நம்பீ” என்றும், “நின்புள்ளுவம் அறியாதவர்க்கு உரை நம்பீ” என்றும் சொன்னவை
யெல்லாம் அந்தப் பிரணயரோஷம் போனவாறே ஏத்தாய்விட்டது. ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து -
3தன்னை அடைந்தவர்களோடு உண்டான பாவபந்தத்தை வெளியிட்ட ஒப்பற்ற பத்து.
இசையொடும் - சொல் மாத்திரத்தாலே. நவில உரைப்பார்க்கு - ஆதரத்தோடு சொல்லுவார்க்கு. நல்குரவு
இல்லை - வறுமை இல்லை; பகவானுடைய அநுபவத்தின் வறுமை இல்லை. என்றது, தூதுவிட்டு, அவன் வரக்கொண்டு
‘புகுர ஓட்டோம்’ என்று பட்ட கிலேசம் படவேண்டா என்றபடி. 4சோறும்
புடைவையும் கிடைக்கும் என்கிறது அன்று; பகவானுடைய அநுபவத்தின் வறுமை இல்லை என்கிறது. 5“உண்ணுஞ்சோறு
பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்” என்று இருக்கிற இவருடைய வறுமை அன்றோ.
ஆகையாலே, அதிகாரிகட்குத் தகுதியாக அன்றோ உண்ணும் உணவு
1. “அப்பன்” என்றதற்கு,
மேலே உபகாரகன் என்று பொருள் அருளிச்செய்து,
‘பிறப்பித்தவன்’ என்று வேறும் ஒரு பொருள்
அருளிச்செய்கிறார் ‘அந்த
நிலையை’ என்று தொடங்கி.
2. பிரணயரோஷத்தாலே நீக்குதல் தோன்ற வார்த்தை சொல்லா நிற்க
“ஏத்திய” என்கிறது என்?
என்ன, அதற்கு விடை அருளிச் செய்கிறார்
‘பிரணய ரோஷத்தாலே’ என்று தொடங்கி. என்றது,
அவனைக்
கண்டவாறே தம்முடைய கோபம் நீங்கித் துதித்தால் பிறக்கும் பிரீதி
அவனுக்கு உண்டாகையாலே
“ஏத்திய” என்கிறார் என்றபடி.
3. “இவையும் ஓர்” என்று விசேடித்ததற்கு, பாவம் அருளிச் செய்கிறார்
‘தன்னை அடைந்தவர்களோடு’
என்று தொடங்கி.
4. ‘செல்வத்தின் வறுமை இல்லை’ என்று கூறுகிறது என்று கூறினாலோ?
எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘சோறும் புடைவையும்’ என்று
தொடங்கி.
5. சோறும் புடைவையும் கிடைக்கும் என்றாலோ? எனின், அதற்கு விடை
அருளிச்செய்கிறார்
‘உண்ணும் சோறு’ என்று தொடங்கி. இது, திருவாய்.
6. 7 : 1.
|