New Page 1
முதலானவைகளும்
இருப்பன. 1“உண்டியே உடையே உகந்து ஓடும் இம் மண்டலத்தொடும் கூடுவது இல்லை யான்”
என்கிறவர்கள் இவற்றைச் செல்வமாக நினையார்களே. 2“சென்று ஒன்றி நின்ற திரு”
என்கிறபடியே அவன்தானே வந்து மேல்விழ நித்தியா நுபவம் பண்ணப்பெறுவர்கள்.
‘அழு கூத்த அப்பன்’ என்கிற இடத்தில் 3“முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும்”
என்கிற பாசுரத்தை யோஜித்துக் கொள்வது.
(11)
திருவாய்மொழி நூற்றந்தாதி
மின்னிடையார் சேர்கண்ணன் மெத்தெனவந் தானென்று
தன்னிலைபோய்ப்
பெண்ணிலையாய்த் தான்தள்ளி-உன்னுடனே
கூடேனென்று ஊடுங் குருகையர்கோன் தாள்தொழவே
நாடோறும்
நெஞ்சமே நல்கு.
(52)
ஆழ்வார்
எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.
1. மேல் விதிமுகத்தால்
அருளிச்செய்து மறைமுகத்தால் அருளிச் செய்கிறார்
‘உண்டியே’ என்று தொடங்கி. இது பெருமாள் திருமொழி,
3 : 4.
2. வறுமை இல்லையாகில், பெறுகிறது ஏது? என்ன, ‘சென்று ஒன்றி நின்ற
திரு’ என்று தொடங்கி அதற்கு
விடை அருளிச்செய்கிறார். இது,
நான்முகன் திருவந். 61.
3. “முழுதும் வெண்ணெய்” என்ற திருப்பாசுரம், பெருமாள் திருமொழி, 7 : 8.
|