பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
153

மூன

மூன்றாந் திருவாய்மொழி - “நல்குரவும்”

முன்னுரை

    ஈடு :- 1‘இப்படித் தாழநின்றவன் சர்வேசுவரன் என்கிறார் என்று பிள்ளான் பணிக்கும்’ என்று அருளிச்செய்வர். அதாகிறது, “யாவையும் யாவரும் பிழையாமல் பிணக்கி” என்று மேலே சொல்லிய சர்வேசுவரத்வத்தை அருளிச்செய்கிறார் என்றபடி. ‘இதிலே 2ஒரு வேறுபாடு தோன்ற பட்டர் அருளிச்செய்வர்’ என்று சீயர் அருளிச் செய்வர். 3அதாவது, “சேரோம்” என்ற எண்ணத்தைக் குலைத்துத் தம்மைச் சேரவிட்டுக்கொண்ட ஆச்சரியத்தைக் கண்டு ஆச்சரியப்படுகிறார் என்பதாம். 4சேரவிட்டுக்கொண்ட படிதாம் பலவாக இருக்கு

 

1. மேல் திருவாய்மொழிக்கும் இத் திருவாய்மொழிக்கும் இயைபு
  அருளிச்செய்கிறார். அவ் வியைபினை, மேல் திருவாய்மொழியிலே
  எளிமையைச் சொன்னவர், இத் திருவாய்மொழியில் சர்வேசுவரத்வத்தைச்
  சொல்லுவான் என்? என்கிற சங்கையிலே, பெரியவன் எளிமையே
  குணமாவது என்கிற தன்மையாலே பரத்துவத்தைச் சொல்லுகிறார்
  என்னுமதனை ஆப்தர்களுடைய வார்த்தைகள் மூலமாகக் காட்டுகிறார்
  ‘இப்படித் தாழ நின்றவன்’ என்று தொடங்கி. ‘இப்படித் தாழநின்றவன்’
  என்றது, “போகு நம்பி”, “கழகம்ஏறேல் நம்பி” என்னலாம்படி தாழநின்றவன்
  என்றபடி. அதனை விவரணம் செய்கிறார் ‘அதாகிறது’ என்று தொடங்கி.

2. ‘ஒரு வேறுபாடு தோன்ற’ என்றது, பரத்துவத்தைச்
  சொல்லுவதாயிருக்கச்செய்தே “நல்குரவும் செல்வும்” என்றது முதலாக
  முரண்பட்ட தன்மையை அருளிச்செய்கையாலே ஒரு விசேடம் தோற்ற
  என்றபடி.

3. ‘அதாவது’ என்று தொடங்கும் வாக்கியத்துக்குக் கருத்து,
  இத்திருவாய்மொழியில் சர்வேசுவரத்வத்தை அருளிச்செய்கிறாராகில், உபய
  விபூதிகட்கும் நிர்வாஹகன் என்கிற இவ்வளவே சொல்ல அமைந்திருக்க,
  “நல்குரவும் செல்வும்” என்று தொடங்கி இத்திருவாய்மொழி முடிய
  முரண்பட்ட தன்மையனாயிருத்தலை அருளிச்செய்ததற்குப் பிரயோஜனம்
  அடைவு படாமையாலே, பிரணயரோஷத்தாலே “சேரோம்” என்று முடிந்து
  போகப் புக்க தம்மை, தன்னுடைய சக்தி விசேடத்தாலே சேர
  விட்டுக்கொண்டமைக்கு எடுத்துக்காட்டாக, முரண்பட்ட
  தன்மையனாயிருத்தலை அவன் காட்டித் தர, இவரும் கண்டு அதனை
  அருளிச்செய்கிறார் என்பது.

4. முன்னரேயும் இங்ஙனம் சேரவிட்டுக் கொண்டமை இல்லையோ?
  அவற்றிற்கும் இதற்கும் வேறுபாடு யாது? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘சேரவிட்டுக்கொண்டபடி தாம்’ என்று தொடங்கி.