மன
மன்றோ:
1முதல் தன்னிலே தம்மையும் அறியாதே அவனையும் அறியாதே இருக்க, தன்படிகளை அறிவித்துக்
கூட்டுவித்துக் கொண்டான். உள்ளே புகுர நின்று தம்முடைய தாழ்வினையும் அவனுடைய உயர்வினையும்
அநுசந்தித்து ‘நாம் அங்குத்தைக்குத் தக்கவர் அல்லோம்’ என்று அகல, தன்செல்லாமையைக் காட்டிப்
பொருந்தவிட்டுக் கொண்டான். 2இனி, அவைபோன்றது அன்றே இது; ஒன்றால் போக்கக்
கூடியது அன்றே. 3அகலில் குற்றம், அணுகில் குற்றமாய் இருப்பது ஒன்றேயன்றோ!
4ஜாதி சண்டாளனை நோக்கினால் பிராயச்சித்தம் உண்டு; பிரணயத்தால் உண்டாகிய கோபம்
ஆகிற காரணத்தால் சண்டாளர் ஆனவர்க்கு அதுவும் இல்லை. ஆக, இந்தப்படிகளாலே தன்செல்லாமையைக்
காட்டி அவன்பொருந்தவிட்டுக்கொண்ட படியைக் கண்டு ஆச்சரியப்படுகிறார் என்றபடி.
1. அவற்றினுடைய தன்மைகளையும்
விளக்கமாகக் காட்டாநின்று கொண்டு,
அவற்றிலும் இதுவே அரிது என்கிறார் ‘முதல் தன்னிலே’ என்று
தொடங்கி.
மயர்வற மதிநலம் அருளிச் சேரவிட்டுக் கொண்டமையிலே நோக்காக
‘முதல் தன்னிலே’
என்று தொடங்கும் வாக்கியம் எழுகிறது. “வளவேழுலகு”
என்ற திருவாய்மொழியிலே நோக்காக ‘உள்ளே
புகுர நின்று’ என்று
தொடங்கி அருளிச்செய்கிறார்.
2. ‘இனி, அவைபோன்றது அன்றே’ என்று தொடங்கும் வாக்கியத்துக்குக்
கருத்து, தன் சொரூபம் முதலானவைகளையும்,
தனக்கு இவர் பக்கல்
உண்டான வியாமோகத்தையும் அறியாதே அகன்ற இவரை அவற்றை
அறிவித்துக் கூட
விட்டுக்கொண்டவை யாகையாலே மேலே கூறிய
இரண்டும் எளிது. இங்குத் தன்பக்கல் பாவபந்தம் முருடு
கொளுந்தி
அகன்ற இடமாகையாலும் காரணங்களைக் காட்டி நீக்கப் போகாமையாலும்
இது அரிது என்பது.
3. நீக்கப் போகாமையைக் காட்டுகிறார் ‘அகலில் குற்றம்’ என்று தொடங்கி.
இங்கே,
இம்மைப் பிறப்பிற் பிரியலம் என்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்.
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புள்ளாள் புலத்தக் கனள்.
என்ற குறட்பாக்களின்
பொருள் ஒப்புநோக்கத்தக்கது.
4. “பாவியேன் மனத்தே” (பா. 6.) என்றதனைக் கடாக்ஷித்து, ஈசுவரன் மேல்
விழாநிற்க முகம்
மாறி இருந்த இது, பிராயச்சித்தம் இல்லாத பாபம்
என்கிறார் ‘ஜாதி சண்டாளனை’ என்று தொடங்கி.
நோக்கினால் -
திருத்தப் பார்த்தால். ‘பிரணயத்தால்’ என்று தொடங்கும் வாக்கியத்துக்குக்
கருத்து, தலைவன் விஷயத்தில் தலைவிக்கு உண்டான பிரணய
கோபத்துக்குப் பரிஹாரம் இல்லை என்பது.
‘இந்தப் படிகளாலே’ என்றது,
மேல் திருவாய்மொழியிற் கூறிய வகைகளாலே என்றபடி.
|