அங
அங்ஙனம் ஆச்சரியப்படுகிற இவர்க்கு, ‘இவ்வளவு அல்ல காணும் நம்முடைய ஆச்சரியங்கள்
இருக்கும்படி. உலகத்தில் தம்மில் தாம் சேராத மாறுபட்ட பொருள்களும் எல்லாம் நம்மோடே சேர்ந்திருக்கிறபடி
பாரீர்! ஆனபின்னர், நம்மோடுசேராதார் இலர்காணும்!’ என்று தன்னுடைய விருத்த விபூதிகத்வத்தைக்
காட்டிக்கொடுக்க இவரும் கண்டார். கண்ட இவர் ‘இவைஇருந்தபடி என்!’ 1கொடுத்த அறிவைக்
கொண்டு அகலுகைக்குக் காரணமாயிருக்கிற இவற்றை எல்லாம் கூட விட்டுக்கொடு நிற்கிறபடிகளும், இனி,
நிமித்தகாரணமானது உபாதான காரணமாக மாட்டாது; உபாதான காரணமானது நிமித்த காரணமாகமாட்டாது;
இங்ஙனே இருக்க, இவை எல்லாம் தானேயாயிருக்கிற படியையும், இவற்றோடே கூடி இருக்கச் செய்தேயும்
இவற்றின் குற்றங்கள் தன்னைத் தீண்டாமல் இருக்கிற படியையும், குற்றம் தீண்டாமல் கடக்க
இருக்கைமாத்திரமன்றிக்கே நியமிக்கின்றவனாய் இருக்கிற படியையும், இனி, நாட்டில், பிராப்யமானது
பிராபகம் ஆகமாட்டாது; பிராபகமானது பிராப்யம் ஆகமாட்டாது; இங்ஙனே இருக்க, பிராப்பிய பிராபகங்கள்
இரண்டும் தானேயாக இருக்கிற படியையும், மற்றும், இவனுடைய அழகு சீலம் முதலானவைகளையும் அநுசந்தித்து,
‘இப்படி உபகார சீலனான சர்வேசுவரன் திருவிண்ணகரிலே வந்து அண்மையில் இருப்பவனானான்; இவன்
அல்லது நமக்குப் பரம பந்துக்கள் இலர்’ என்று அறுதியிட்டு, ‘இவன் திருவடிகள் அல்லது பற்று இல்லை’
என்று பேசுகிறாராயிருக்கிறது.
1. இத்திருவாய்மொழியிற்
சொல்லப்படுகின்ற பொருளைச் சுருங்க
அருளிச்செய்கிறார் ‘கொடுத்த அறிவை’ என்று தொடங்கி.
“எண்ணமாய்
மறப்பாய்” என்றதனைத் திருவுள்ளம்பற்றிக் ‘கொடுத்த அறிவை’ என்று
தொடங்கியும்,
“பெய்த காவு கண்டீர்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி
‘இனி நிமித்த காரணமானது’ என்று தொடங்கியும்,
(உபாதான
காரணம்-முதற் காரணம்.) “அல்லனாய்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி
‘இவற்றோடே’
என்று தொடங்கியும், “பரஞ்சுடர்” என்றதனைத் திருவுள்ளம்
பற்றிக் ‘குற்றம் தீண்டாமல்’ என்று
தொடங்கியும், “என் சரண், என்னை
ஆளுடை” என்றதனைத் திருவுள்ளம்பற்றி ‘இனி நாட்டில்’ என்று
தொடங்கியும், (பிராப்யம் - பேறு. பிராபகம் - பேற்றினை அடைதற்குரிய
வழி.) “பொன்னப்பன்
மணியப்பன் முத்தப்பன்”, “தந்தனன் தன தாள்
நிழலே” என்பனவற்றைத் திருவுள்ளம்பற்றி ‘மற்றும்
இவனுடைய’ என்று
தொடங்கியும், “என்னப்பன் எனக்காய் இகுளை” என்றதனைத்
திருவுள்ளம்பற்றி
‘இவன் அல்லது நமக்குப் பரம பந்துக்கள் இலர்’
என்றும், “கழல்கள் அன்றி மற்றோர் களைகண்
இலம்” என்றதனைத்
திருவுள்ளம்பற்றி ‘இவன் திருவடிகள்’ என்று தொடங்கியும்
அருளிச்செய்கிறார்.
|