பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
157

    ஈடு :- முதற்பாட்டு. 1விருத்த விபூதிகனான சர்வேசுவரனைத் திருவிண்ணகரிலே காணப்பெற்றேன் என்கிறார்.

    நல்குரவும் செல்வும் - வறுமையும், அதற்கு எதிர்த்தட்டான செல்வமும், நரகும் சுவர்க்கமும் - துக்கத்திற்கே இருப்பிடமான நரகமும், சுகத்திற்கே இருப்பிடமான சுவர்க்கமும். வெல்பகையும் நட்பும் - சமாதானத்தாலே மீளுமதன்றிக்கே வென்றே விடவேண்டும் பகையும், அதற்கு எதிர்த்தட்டான உறவும். விடமும் அமுதமுமாய் - முடித்தே விடுவதான விஷமும், போன உயிரை மீட்கவற்றான அமுதமுமாய். 2போன உயிரை மீட்டுத் தான் போக்கியமுமாய் அன்றோ அமிருதம் இருப்பது. 3விருப்பம் இல்லாத வறுமை முதலானவற்றோடு விரும்பக்கூடிய செல்வம் முதலானவற்றோடு வாசியறத் ததீயத்வ ஆகாரத்தாலே இவர்க்கு உத்தேசியமாய் இருக்குமன்றோ. பல்வகையும் பரந்த பெருமான் - 4ஞானதிகனான தானும்கூட விபூதியைப் பேசப் புக்கு “என்னுடைய விபூதியின் பரப்பிற்கு முடிவு இல்லை” என்று இளைத்துக் கைவாங்கினத்தை, இவ்வளவு அன்பிலே கனத்த இவரால் சொல்லப் போகாது அன்றோ.5 ஆனாலும் சிறிது பேசினா

 

1. பாசுரம் முழுதினையும் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
  விருத்த விபூதிகன் - ஒன்றற்கொன்று தம்முன் மாறுபட்ட
  செல்வத்தையுடையவன்.

2. அமுதம் இனிமையாக இருக்குமே ஒழிய, போன உயிரை மீட்க வற்றாயும்
  இருக்குமோ? என்ன, ‘போன உயிரை’ என்று தொடங்கி அதற்கு விடை
  அருளிச்செய்கிறார். என்றது, அமுதத்திற்கு இரண்டு தன்மையும் உண்டு
  என்றபடி.

3. விரும்பப்படுகின்ற செல்வம் முதலானவற்றையும் விரும்பப்படாத வறுமை
  முதலானவற்றையும் சேர்த்துக் கூறுவான் என்? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘விருப்பமில்லாத’ என்று தொடங்கி. ததீயத்வ ஆகாரம்
  - அவனுடைய உடைமை என்னும் தன்மை.

4. மேலும் சிலவற்றைச் சொல்லாமல், “பல்வகையும் பரந்த” என்று திரள
  அருளிச்செய்வான் என்? என்ன, அதற்கு விடை அருளிச் செய்கிறார்
  ‘ஞானாதிகனான’ என்று தொடங்கி.

  “ஹந்த தே கதயிஷ்யாமி விபூதீராத்மநஸ்ஸுபா:
   ப்ராதாந்யத: குருசிரேஷ்ட நாஸ்தி அந்த: விஸ்தரஸ்ய மே”

  என்பது, ஸ்ரீ கீதை, 10 : 19.

5. ஆயின், முதலிலேயே “பல்வகையும் பரந்த” என்னாமல், சிலவற்றைச்
  சொல்லுவான் என்? என்ன, ‘ஆனாலும்’ என்று தொடங்கி அதற்கு விடை
  அருளிச்செய்கிறார். என்றது, சொல்ல ஒண்ணாது என்னும் போது, சில
  சொல்லிப் பின்னர் ‘முடியாது’ என்னவேண்டுமன்றோ என்றபடி.