பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
158

ராகவும் வேணும் அன்றோ. 1வஸ்துவுக்கு விசேடணத்தை ஒழியத்தோன்றுதல் இல்லையன்றோ. 2“வஸ்து விசேடணம் இல்லாதது” என்றுவிசேடணம் இல்லாததாக மாயாவாதம் சொல்லுகிறார் அலரே. 3அங்ஙனேயாகில் மோக்ஷசாஸ்திரந்தான் வேண்டாவே. 4வஸ்துவின் உண்மையைக் கொள்ளும் போது விசேடணம் வேறுபடுத்துவதாயல்லது இராது. 5ஒன்றற்கு ஒன்று விசேடணமாகும்போது அந்யயோக வியவச்சேதம் பண்ணிக்கொண்டல்லது விசேடணம் ஆகமாட்டாது. 6இங்கு, இவனுக்கு, தன்னினின்றும் வேறுபட்ட பொருள்களடங்கலும் விசேடணமாயிருக்கையாலே அந்யயோகவியவச்சேதம் பண்ண ஒண்ணாது. ஆனால், மாறுபட்ட விசேடணங்கள் ஒரு பொருளிலே சேருகிறபடி எங்ஙனே? என்னில், அயோகவியவச்சேதம் பண்ணிக்கொண்டு சேருகிறது.

 

1. அங்ஙனம் சொல்ல வேண்டுவான் என்? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘வஸ்துவுக்கு’ என்று தொடங்கி.

2. விசேடணம் இன்றியே பொருள் தோன்றாதோ? என்ன, அதுமாயாவாதிகளுக்கு
  ஒழிய, இவர்க்கு உடன்பாடு அன்று என்கிறார் ‘வஸ்து விசேடணம்
  இல்லாதது’ என்று தொடங்கி.

3. “நிர்விசேஷமே வஸ்து - பொருள் விசேடணம் இல்லாதது” என்றால்,
  விரோதம் யாது? என்ன, ‘அங்ஙனேயாகில்’ என்று தொடங்கி அதற்கு
  விடை அருளிச்செய்கிறார். என்றது, “ஸவிஸேஷ வஸ்து விஷயத்வாத் ஸர்வ
  பிரமாணாநாம் - எல்லாப் பிரமாணங்களும் விசேஷணத்தோடு கூடிய
  பொருளையே விஷயமாகவுடையன ஆகையாலே” என்கையாலே,
  மோக்ஷசாஸ்திரமும் விசேடணத்தோடு கூடிய பிரஹ்மத்தைச் சொல்லுகிறதே
  ஒழிய, விசேடணம் இல்லாத பொருளைச் சொல்லாமையாலே மோக்ஷ
  சாஸ்திரம் பயன் அற்றதாய்விடும் என்றபடி.

4. பொருள் விசேடணத்தை ஒழியத் தோன்றுதல் இல்லை என்றார் மேல்.
  அதற்குக் காரணத்தை அருளிச்செய்கிறார் ‘வஸ்துவின் உண்மையை’
  என்று தொடங்கி. என்றது, தன்னினின்றும் வேறான பொருள்களை
  வேறுபடுத்தும் தன்மையோடு வஸ்துவைக் கோடல்வேண்டுகையாலே
  என்றபடி.

5. விசேடணத்தை வேறுபடுத்துவதாகவே உடையது வஸ்து என்றால்,
  “நல்குரவும்” என்ற இடத்தில் அது சொல்லப்போகாதே? என்று
  சங்கிக்கிறார் ‘ஒன்றற்கு ஒன்று’ என்று தொடங்கி. அந்யயோக வியவச்சேதம்
  - பிறிதினியைபு நீக்கிய விசேடணம்; இனச்சுட்டுள்ள அடை.

6. இங்கு அந்யயோக வியவச்சேதம் உண்டோ? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘இங்கு’ என்று தொடங்கி. என்றது, அயோக
  வியவச்சேதம் மாத்திரம் கோடல் வேண்டும் என்பது கருத்து. அயோக
  வியவச்சேதம் - இயைபின்மை நீக்கிய விசேடணம்; இனச்சுட்டு இல்லா
  அடை. விசேடணமாவது, பிறிதினியைபு நீக்கிய விசேடணத்தின் வழியாகத்
  தனக்கு வேறுபட்ட பொருள்களைக் காட்டிலும் தான் அடுத்து நிற்கும்
  பொருளை வேறுபடுத்துவது.