பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
159

1இவர

    1இவர்தாம் அவனை அநுபவிக்கவன்றோ இழிகிறது, இந்த மாறுபட்ட விசேடணங்களைச் சொல்லுகிற இவற்றால் பிரயோஜனம் என்? என்னில், அவனை உள்ளபடி கண்டு அநுபவிக்கவேணுமே. 2இராஜபுத்திரனுக்கு, இராஜாவினுடைய இன்பத்திற் கிடமான ஓலக்கத்தோடு சிறைக்கூடத்தோடு வாசி அற ‘என் தமப்பனுடைய செல்வம், என்றுதோன்றுமன்றோ. 3இவர்தமக்கு இங்கு உண்டான அநுசந்தானம், முக்தனுக்கு லீலாவிபூதி அநுசந்தானம் போலே அன்றோ. 4“ஜனங்களின் நடுவில் இருந்துள்ள இந்தச் சரீரத்தை நினையாதவனாகிறான்” என்னா நிற்கச்செய்தே, முக்தனுக்கு லீலா

 

  இங்கே,

      “பன்மை சுட்டிய பெயர் என்றமையால் பன்மையே உணர்த்தல்
  வேண்டும் எனின், அற்றன்று; இயைபின்மை நீக்கலும் பிறிதினிபு நீக்கலும்
  என விசேடித்தல் இருவகைத்து. ‘வெண்குடைப் பெருவிறல்’ என்றவழிச்
  செங்குடை முதலியவற்றோடு இயைபு நீக்காது வெண்குடையோடு
  இயைபின்மை மாத்திரம் நீக்கி வெண்குடையான் என்பது படநிற்றலின்
  அஃது இயைபின்மை நீக்கலாம். ‘கருங்குவளை’ என்றவழிச் செம்மை
  முதலாயினவற்றோடு இயைபு நீக்கலின், அது பிறிதின் இயைபு நீக்கலாம்.
  பன்மை சுட்டிய பெயர் என்பது, ‘வெண்குடைப் பெருவிறல்’ என்பதுபோல,
  ஒருமை இயைபு நீக்காது பன்மை சுட்டுதலோடு இயைபின்மை மாத்திரை
  நீக்கிப் பன்மை சுட்டும் என்பது பட நின்றது. அதனான் விசேடிக்குங்கால்
  பிறிதினியைபு நீக்கல் ஒருதலை அன்று என்க.” என்ற சேனாவரையர்
  உரையை ஒப்பு நோக்கல் தகும். (தொல். சொல். சூ. 182.)

1. ‘விருப்பம் இல்லாத வறுமை முதலானவற்றோடு’ என்று தொடங்கி மேலே
  அருளிச்செய்த வாக்கியத்தை வினா விடை மூலமாக விவரிக்கிறார்
  ‘இவர்தாம்’ என்று தொடங்கி.

2. தாழ்ந்தவைகளான இவற்றைக் கூட்டி அநுபவிக்கும்போது துக்க ரூபமாய்
  இராவோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இராஜபுத்திரனுக்கு’
  என்று தொடங்கி.

3. நன்று; ததீயத்வ ஆகாரத்தாலே உத்தேசியமாவது முக்தனுக்கு அன்றோ?
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இவர் தமக்கு’ என்று
  தொடங்கி.

4. ‘அம் முக்தனும் நினையான்’ என்று சொல்லுகிறதே? என்ன, ‘ஜனங்களின்
  நடுவில்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். “நோபஜநம்
  ஸ்மரந் இதம் சரீரம்” (சாந்தோக்யம், 8. 12 : 3 :) என்றது, கர்மம்
  காரணமான ஆகாரத்தாலே நினையான்; ததீயத்வ ஆகாரத்தாலே
  உத்தேசியம் என்று நினைத்து அநுபவிப்பான் என்றபடி.