பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
179

New Page 1

கொடு வாருங்கோள்’ என்றால், இசையார் என்று பார்த்து, நான் காட்டப் புகுவது ஓர் ஆச்சரியத்தைப் பாருங்கோள் என்பாரைப் போலே இவர்கள் கண்முகப்பே நிமிர்ந்த திருவடித் தாமரைகளையுடையவனை. காண்மின்கள் - 1இது ஓர் ஆச்சரியம் என்னவேண்டிற்றுக்காணும் ‘தலைகளிலே அடிபடப் புக்கவாறே இறாய்ப்பர்கள்’ என்று. குருகூர்ச் சடகோபன் சொன்ன - 2இந்தச் சௌலப்யத்தை அநுபவித்தவர் சொன்ன வார்த்தையாகையாலே ஆப்தம் என்கை. ஆயிரத்து ஆணை திருவிண்ணகர் இப்பத்தும் வல்லார் - ஈசுவரனுடைய உலக நியமனத்தைச் சொன்ன இத் திருவாய்மொழி வல்லார். விண்ணோர்க்கு என்றும் கோணை இன்றிக் குரவர்கள் ஆவர் - நித்தியசூரிகளுக்குக் காலம் என்னும் ஒருபொருள் உள்ள வரையிலும் கௌரவிக்கத் தக்கவராவர். இதில் கோணை இல்லை - ஒருமிறுக்கு இல்லை. என்றது, என் சொல்லியவாறோ? எனின், சம்சார சம்பந்தம் சிறிதும் இல்லாத நித்தியசூரிகளுக்கு, 3நித்திய சம்சாரியானவன் இதனைக் கற்ற அளவிலே கௌரவிக்கத் தக்கவராதல் எங்ஙனே? என்னில், அங்கே இருந்து வைத்தே ததீயத்வ ஆகாரத்தாலே லீலாவிபூதியை நினைத்து உவகையராம் நிலையுள்ளது முக்தர்க்கு ஆகையாலே, இங்கே இருந்தே, அவர்கள் அநுசந்தானத்தைச் செய்கிற இவனை, ‘சம்சாரத்தே இருந்து வைத்தே நம்படி ஒருவனுக்கு உண்டாவதே!’ என்று கொண்டாடி இருப்பார்கள் என்பதனைத் தெரிவித்தபடி.

(11)

திருவாய்மொழி நூற்றந்தாதி

    நல்லவலத் தால்நம்மைச் சேர்த்தோன்முன் நண்ணாரை
    வெல்லும் விருத்த விபூதியன்என்று - எல்லையறத்
    தானிருந்து வாழ்த்தும் தமிழ்மாறன் சொல்வல்லார்
    வானவர்க்கு வாய்த்தகுர வர்.

(53)

    ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.

 

1. ரசோக்தியாக அதனை விவரணம் செய்கிறார் ‘இது ஓர் ஆச்சரியம்’ என்று
  தொடங்கி.

2. இந்தச் சௌலப்யத்தை - திருவுலகு அளந்தருளின சௌலப்யத்தை.

3. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
  தெய்வத்துள் வைக்கப் படும்.

  என்ற திருக்குறளையும், அதன் பரிமேலழகர் உரையையும் இங்கே நோக்குக.