ந
நான்காந்
திருவாய்மொழி - “குரவை”
முன்னுரை
ஈடு :-
1இத்திருவாய்மொழியில்
ஆழ்வார் ஸ்ரீ வால்மீகி பகவானோடு ஒப்பர். அவனும் இராமாவதாரமல்லது போக்கி அறியான்; அவனுடைய
பிரபந்தமும் அப்படியே. இவரும் கிருஷ்ணாவதாரம் அல்லது அறியார்; இத் திருவாய்மொழி கிருஷ்ணனுடைய
சரிதை ஒழிய வேறு ஒன்றைச் சொல்லாது.2 அன்றிருக்கே, “சூரனே! என் எண்ணமானது வேறு
இடத்தில் செல்வது இல்லை” என்று கொண்டு ‘பரநிலையும் கூட வேண்டேன்’ என்ற திருவடியைப் போலே
யாயிற்று இவரும் கிருஷ்ணாவதாரம் ஒழிய வேறு ஒன்று அறியாதபடி என்னுதல். 3“சேணுயர்
வானத்திருக்கும் தேவபிரான்” என்கிறபடியே, கிட்டிநின்று அநுபவிக்கப் பெற்றிலோம் என்கிற
இழவு தீர, பூமியிலே ஆகப் பெற்றது; “தொல்லருள் நல்வினையால் சொலக்கூடுங்கொல்?” என்றே யன்றோ
இவர் ஆசைப்பட்டது. அதாவது, நா நீர் வந்து திருநாமம் சொல்லுகையாகிறது 4புண்ணியத்தின்
பலமே அன்றோ. 5“பிறந்தவாறும்” என்ற திருவாய்மொழியில் இவர்க்கு உண்டான இழவு
எல்லாம் தீரும்படி ஸ்ரீ பிருந்தா
1. இத்திருவாய்மொழியிலே,
கிருஷ்ணனுடைய குணங்களிலே ஈடுபட்டுப்
பேசுகிற இவர்க்கும், கிருஷ்ணனுடைய குணங்களையே சொல்லுகிற
இத்திருவாய்மொழிக்கும் திருஷ்டாந்தமாக, ஸ்ரீவால்மீகி பகவானையும்,
ஸ்ரீராமாயணத்தையும் அருளிச்செய்கிறார்
‘இத்திருவாய்மொழியில்’ என்று
தொடங்கி. அதனை விவரணம் செய்கிறார் ‘அவனும்’ என்று தொடங்கி.
2. வேறும் ஒரு திருஷ்டாந்தம் காட்டுகிறார் ‘அன்றிக்கே’ என்று தொடங்கி.
“ஸநேஹோ மே பரமோ ராஜந் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித:
பக்திஸ்ச நியதா வீர பாவோ நாந்யத்ர கச்சதி”
என்பது, ஸ்ரீராமா. உத். 40 : 16.
3. “மாசறுசோதி” என்று தொடங்கி “மின்னிடை மடவார்” அளவும் உண்டான
வியசனங்கள் எல்லாம்
தீர இத்திருவாய்மொழியில் அநுபவிக்கிறார்
என்கிறார் “சேணுயர் வானத்திருக்கும்” என்று தொடங்கி.
‘பூமியிலே
யாகப்பெற்றது’ என்றது, அவதரிக்கப்பெற்றது என்றபடி.
4. ‘புண்ணியத்தின் பலமேயன்றோ’ என்றது, புண்ணியத்தின் பலம்
ஆகையாலே ஆசைப்பட்டபடியே திருநாமங்கள்
சொல்ல நேர்ந்தது
என்றபடி.
5. ‘“பிறந்தவாறும்” என்ற திருவாய்மொழியில் இவர்க்கு உண்டான
இழவெல்லாம்’ என்றது, தரித்துநின்று
அநுபவிக்கமாட்டாத இழவு எல்லாம்
என்றபடி.
|