ப
பாம்பினை ஓட்டினதும், இவை முதலான மற்றும் பலவான, ஆதிசேட சயனத்தையுடைய பெருமானது ஆச்சரியமான
செயல்களையே சொல்லிக் கொண்டு நல்ல இராப்பொழுதும் நல்ல பகற்பொழுதும் தவிரேன்; எனக்கு வேறு
என்ன குறை உளது?
வி-கு
:-
மற்றும்
பல மாய வினைகளை என்று கூட்டுக. அலற்றித் தவிர்கிலன் என்க.
இத் திருவாய்மொழி, அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரியவிருத்தம்.
ஈடு :-
1முதற்
பாட்டு. பகலும் இரவும் கிருஷ்ணனுடைய குணங்களைப் பிரீதி முன்னாக அநுபவிக்கப் பெற்ற எனக்கு, இனி
ஒரு குறை இல்லை என்கிறார்.
ஆய்ச்சியரோடு குரவை கோத்ததும்-“பிறந்தவாறும்” என்றாற்போலே தொடங்கி ஓர் அவதாரம்
முன்னாக இழியாமல், 2இதிலே இழிவான் என்? என்னில், “மின்னிடை மடவார்” என்ற
திருவாய்மொழியில் உண்டான தம்முடைய பிரணய ரோஷத்தினைப் போக்கித் தம்மைச் சேரவிட்டுக்
கொண்டபடி, திருக்குரவைக் கூத்தில் பெண்களோடே கலந்து அவர்களை அநுபவிப்பித்தாற் போலே
இருக்கையாலே, அது முன்னாகப் பேசுகிறார். அன்றிக்கே, 3நாம் அநுசந்திக்கில் அன்றோ
ஓர் அடைவாக இழிவது! அவன் அநுபவிப்பித்தபடியே பேசுகிறாராகையாலே திருக் குரவைக்கூத்தினை முதல்
முன்னம் பேசுகிறார் என்னுதல், திருக்குரவையில் பெண்களோடு உண்டான கலவியையாயிற்று இவர்க்கு முதலிலே
காட்டிக் கொடுத்தது. 4ஐந்து லக்ஷம் குடிகளிலுள்ள பெண்கள் எல்லாரோடும் கலந்த பிரீதி
உண்டாயிற்று, இவர் ஒருவரோடு கலந்து பிரீதி. 5தன் செல்லாமையாலே ஆயர் பெண்களுடைய
மாலையிலே தன்னை
1. “அரவில்
பள்ளிப்பிரான் தன் மாய வினைகளையே அலற்றி” என்பது
போன்றவைகளைக் கடாக்ஷித்து அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
2. இதிலே திருக் குரவைக்கூத்திலே.
3. அங்ஙனம் இழிந்ததற்கு வேறும் ஒருவகையில் காரணம் காட்டுகிறார் ‘நாம்
அநுசந்திக்கில்’ என்று
தொடங்கி.
4. அவன்தான் இதனை முந்தற
அநுபவிப்பித்தற்குக் காரணம் என்? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘ஐந்து லக்ஷம்’ என்று
தொடங்கி.
5.
“ஆய்ச்சியரோடு” என்ற மூன்றாம் வேற்றுமை யுருபிற்குக் கருத்து
அருளிச்செய்கிறார் ‘தன்செல்லாமையாலே’
என்று தொடங்கி. என்றது,
ஆய்ச்சியர்க்கு உண்டான உயர்வு இன்மை தனக்கு உண்டாம்படி
கோத்தான்
என்றபடி. இங்கு, “ஆய்ச்சியரோடு” என்ற ஒருவினைக்
கிளவியாகிய “ஓடு” உருபு, உயர்பில் வழியில்
வந்திருப்பதாகத்
திருவுள்ளம்பற்றி இவ்விசேடவுரை அருளிச்செய்கிறார்.
|