பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
185

New Page 1

செயல்களுக்கு ஓர் எண் இல்லை. 1“பிறந்தவாறும்” என்ற திருவாய்மொழியில், வலிமைக் குறைவாலே சொல்ல மாட்டிற்றிலர்; இங்கு, உகப்புத்தலைமண்டையிட்டுச் சொல்லமாட்டுகிறிலர். மற்றும், இப்படிப் பெண்களுடைய கலவிக்குத் 2தண்ணீர்த்துரும்பு அறுத்தவை பலவாம். அரவில் பள்ளிப் பிரான் - 3நாட்டார் உறக்கம், தமோகுணத்தால் மறைக்கப்பட்டதாய்த் தங்கள் பொருட்டேயாய் இருக்கும்; இவன் உறக்கம் பிறருடைய ரக்ஷணத்தின் பொருட்டு இருக்கும். 4உறங்குவான்போல் யோகு செய்த பெருமான் அல்லனோ. உறங்கினானாகில் பிறருடைய ரக்ஷணத்துக்கு உடலாயிருக்கும்; உணர்ந்திருந்தானாகிலும் அப்படியே; இது என்ன உபகாரந்தான்! அரவில் பள்ளிப்பிரான் - 5மேலே, ஒரு பாம்போடு உண்டான சேராமை சொல்லிற்று; இங்கு, ஒரு பாம்போடு உண்டான சேர்த்தி சொல்லுகிறது. அங்கு, போகத்தைக் காற்கடைக் கொண்டமை சொல்லிற்று; இங்கு, போகப் பிராவண்யம் சொல்லுகிறது. 6பிரதிகூலனான காளியனைப் பறக்க ஓட்டினான்; அநுகூல

 

1. “பிறந்தவாறும்” என்ற திருவாய்மொழியிற் போன்று, இங்கு வலிமைக்குக்
  குறை இல்லையே? அங்ஙனம் இருக்க, சேரச்சொல்லாது, “மற்றும் பல”
  என்றது என்? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘பிறந்தவாறும்’
  என்று தொடங்கி.

2. ‘தண்ணீர்த்துரும்பு அறுத்தவை பலவாம்’ என்றது, தண்ணீர்த்துரும்பு
  போலே விரோதிகளானவற்றைப் போக்கின செயல்கள் பலவாம் என்றபடி.

3. உணர்ந்த சமயத்தில் ஒழிய, உறங்குகிற சமயத்தில் செய்கிற உபகாரம்
  யாது? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘நாட்டார்’ என்று
  தொடங்கி.

4. இவன்உறக்கம் பிறரைக் காப்பாற்றும் பொருட்டேயாக இருக்கும்
  என்பதற்கும் பிரமாணம் காட்டுகிறார் ‘உறங்குவான்’ என்று தொடங்கி.
  இது, திருவாய். 5. 4 : 11.

      வியாக்கியாதாவினுடைய ஈடுபாடு : ‘உறங்கினானாகில்’ என்று
  தொடங்கும் வாக்கியம்.

5. “நாகம் காய்ந்ததும்” என்றதனையும் கூட்டிக்கொண்டு “அரவில்
  பள்ளிப்பிரான்” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘மேலே’ என்று
  தொடங்கி. ரசோக்தியாக மேல் வாக்கியத்தை விவரணம் செய்கிறார்
  ‘அங்கு, போகத்தை’ என்று தொடங்கி. போகம் - பாம்பினுடல், இன்பம்.

6. இரண்டும் பாம்பாக இருக்க, இப்படிச் செய்கைக்குக் காரணம் யாது? என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘பிரதிகூலனான’ என்று தொடங்கி.