வரவ
வரவிட்டுக் கலக்குமவன்
அன்றோ. 1‘இப்படி அநுபவிக்கிறான் சர்வேசுவரன்’ என்று அறியான் அன்றோ; 2இவன்,
தன்னை மனித சஜாதீயன் ஆக்கிக்கொண்டு இருக்கையாலே. 3அன்றைய தினத்தில் கல்மழையில்
பசுக்களுக்கும் இடையர்க்கும் வந்த ஆபத்தைத் தீர்த்தாற்போலே யாகாதே, இவர்க்கும் “மின்னிடை
மடவார்” என்ற திருவாய்மொழியில் வந்த ஆபத்தைத் தீர்த்தபடியும். ஏந்தியதும்-4பிறர்பொருட்டு
ஆகையாலே கைக்கு ஓர் ஆபரணம் போலே ஆயிற்று. அது தான் வருத்தமற்று இருந்தபடி. பூ ஏந்தினாற்
போலே இருந்தது. 5ஏழு வயதிலே ஏழுநாள் ஒருபடிப்பட தரித்துக்கொண்டு அன்றோ நின்றது!
‘இப்படி ஏழு வயதிலே ஏழு நாள் தரித்ததற்கு என் செய்வோம் நாம்’ என்று ஒருவர் நெஞ்சாறல் படாதபடி
சகோத்திரியாய் நின்றே அன்றோ இவன் இவற்றை ரக்ஷித்தது.
உரவு நீர்-தறை காண
ஒண்ணாமையால் உண்டான ஆழத்தையுடைத்தான மிடுக்கையுடைய நீர் என்னுதல். அன்றியே, காளியனுடைய
விஷத்தால் ஒருவர்க்கும் கிட்ட ஒண்ணாத வலியையுடைய நீர் என்னுதல். அன்றிக்கே, 6முதுநீர்
ஆகையாலே வலிய நீர் என்னுதல். உரவு - விஷம். நாகம் காய்ந்ததும் - நாகத்தை ஓட்டியதும்.
7பாம்பு அடித்து மேலிட்டுக் காணும் பெண்களோடே ஜலக்கிரீடை பண்ணிற்று. உள்பட மற்றும்
பல - இவை முதலான
1. சர்வேசுவரனிடத்திலும்
இப்படிப் பொறாமை உண்டாகுமோ? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘இப்படி’ என்று தொடங்கி.
2. அறியாமைக்குக் காரணத்தை
அருளிச்செய்கிறார் ‘இவன், தன்னை’ என்று
தொடங்கி.
3. “குன்றம் ஒன்று ஏந்தியதும்”
என்கிறவருடைய மனோபாவத்தை
அருளிச்செய்கிறார் ‘அன்றையதினத்தில்’ என்று தொடங்கி.
4. “ஏந்தியதும்” என்றதற்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘பிறர் பொருட்டு’
என்று தொடங்கி. ‘கைக்கு ஓர் ஆபரணம்போலே’ என்றதனை
விவரணம்
செய்கிறார் ‘பூ எந்தினாற் போலே இருந்தது’ என்று.
5. பிறர் பொருட்டுத் தரித்து
நின்றதன் எல்லையை ரசோக்தியாக
அருளிச்செய்கிறார் ‘ஏழுவயதிலே’ என்று தொடங்கி. சகோத்திரியாய்
-
சகோத்திரனாய் என்றும், சஜ்ஞாதிவர்க்கன் என்றும் இருபொருள்.
கோத்திரம் - மலையும், குலமும்.
6. முதுநீர் - பழைய நீர்.
7. “குரவை
ஆய்ச்சியரோடு” என்றதனையும் கூட்டி ரசோக்தியாக, பாவம்
அருளிச்செய்கிறார் ‘பாம்பு அடித்து’
என்று தொடங்கி.
|