|
அழ
அழிந்தது இல்லை காணும்.
1கூனி சாத்திவிட்ட உடனே பெண்கள் கண்களாலே இலச்சினை இட்டு விடுகையினாலே இவனால்
அழிக்கவும் போகாதே அன்றோ. இவர்கள் கண்களாலே இலச்சினை இடுகையாவது, அவன் தோள்களிலே
சேலும் கயலும் இடுகை அன்றோ. 2இவன் மல்லரோடே சேர்ந்து அழித்தானாகிலும்,
‘மற்று எங்கேனும் அழித்தான்’ என்றே அன்றோ அவர்கள் இருப்பார்கள். இதனை அழித்துப்
போனானாகில், பின்பு பெண்கள் கோஷ்டிக்கு ஆளாகானே. ஏன்று எதிர்ந்து வருகையாவது, பொரக்கடவோம்
என்று நெஞ்சிலே துணிந்து வருகை.
நிரை மேய்த்ததும்
- முதற் பிறவிக்கு ஈடாகச் செய்த செயலும். இரண்டாம் பிறவிக்கு ஈடாகச் செய்த செயலும்: க்ஷத்திரியப்
பிறவிக்கு ஈடாம்படி மல்லரோடே போர் செய்தான்; ஆயர் பிறவிக்கு ஈடாம்படி பசுக்களை மேய்த்தான்.
3அன்றிக்கே, பசுக்களை மேய்த்த போதை ஆயாச மாகாதே, மல்லரோடு பொருதபோதும் உள்ளது
என்னலுமாம். நீள் நெடும் கைச் சிகரம் மா களிறு அட்டதும் - 4மல்லர்க்குத் தப்பிலும்
தப்ப ஒண்ணாது கண்டீர் இதற்கு. தூரப்போய்த் தப்ப ஒண்ணாதபடி கையாலே வளைத்துக் கொள்ளவற்றாயிருத்தலின்
‘நீள் நெடும்
1. குறி அழியாமைக்குக் காரணம்
யாது? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘கூனி சாத்திவிட்ட’ என்று தொடங்கி. சேலும்
கயலும்
இடுகையாவது, அவைபோன்ற கண்களாலே பார்த்தல்.
2. மல்யுத்தத்தில் சாந்து
அழிந்தால் இவர்கள் செய்வது யாது? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘இவன் மல்லரோடே’
என்று தொடங்கி.
“வண்டூது சாந்தம் வடுக்கொள
நீவிய
தண்டாத்தீஞ் சாயல்
பரத்தை வியன்மார்ப!
பண்டின்னை யல்லைமன்
ஈங்கெல்லி வந்தீயக்
கண்ட தெவன்மற் றுரை.
ஏந்தெழில் மார்ப! எதிரல்ல
நின்வாய்ச்சொல்
பாய்ந்தாய்ந்த தானைப்
பரிந்தானா மைந்தினை
சாந்தழி வேரை சுவல்தாழ்ந்த
கண்ணியை
யாங்குச்சென் றீங்குவந்
தீத்தந்தாய்.”
என்பன, கலித்தொகை. 93, 96.
3. “மல்லரைச் செற்றதும்
நிரைமேய்த்ததும்” என்று இரண்டனையும் சேர்த்து
அருளிச்செய்ததற்கு வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார்
‘அன்றிக்கே’
என்று தொடங்கி.
4. “நீள்
நெடும் கை” என்கிறவருடைய மனோபாவத்தை அருளிச்செய்கிறார்
‘மல்லர்க்கு’ என்று தொடங்கி.
அதற்குக் காரணத்தை அருளிச்செய்கிறார்
‘தூரப்போய்’ என்று தொடங்கி.
|