பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
193

New Page 1

கை’ என்கிறது. ‘நெடுங்கை’ என்னாநிற்கச் செய்தே ‘நீள் நெடுங்கை’ என்கிறதன்றோ, அதன் பெருமை இருக்கிறபடி. ஒரு கை தான் வேண்டுமோ? இது தன்னைக் காணவே அமையுமாதலின் ‘சிகர மா களிறு’ என்கிறது. 1“ஆனை மா மலை” என்னக் கடவதன்றோ. மலைச் சிகரம் போலே யாயிற்றுப் பெருத்து இருக்கிறபடி. அட்டதும் - முடித்ததும். இவை போல்வனவும் பிறவும் - இவை தொடக்கமான கேசியைக் கொன்ற செயல் முதலானவைகளும். புகர் கொள் சோதி - குவலயாபீடத்தைக் கொன்ற பின்னர் வடிவிற் பிறந்த ஒளிபெற்ற தேஜஸ்ஸு. பிரான் - உபகாரகன். 2“வெயர்வைத் துளிகள் நிறைந்த கிருஷ்ணனுடைய திருமுகமண்டலத்தைத் தோழிகாள் பாருங்கள்” என்னும்படி இருக்குமன்றோ. யானையோடே பொருதாலும் இங்ஙனேயோ வேர்ப்பது? முலையாகிற மலையோடு பொருததோடு யானையாகிற மலையோடு பொருததோடு வாசி இல்லை காணும் இவனுக்கு.

    தன் செய்கை நினைந்து புலம்பி - உபகாரம் செய்தலையே இயல்பாகவுடையவனுடைய செயல்களை நினைத்து, அது உள்ளடங்காமை புலம்பி. என்றும் நுகர வைகல் வைகப்பெற்றேன் - நாடோறும் அநுபவித்துக்கொண்டு, வைகலானது வைகப்பெற்றேன்-வைகல் வைகப்பெற்றேன்-காலமானது கழியப்பெற்றேன். 3வைகல்-கழிதல். அன்றிக்கே, அநுபவிக்கைக்குப் போரும்படி காலமானது நெடுகப்பெற்றேன் என்றுமாம். அப்போது, வைகுதலாவது - நெடுகுகை. எனக்கு என் இனி நோவதுவே - ‘காலம் நெடுகுவது

 

1. இது, திருவாய். 8. 4 : 1.

2. யார்க்கு உபகரித்தான்? என்ன, மதுரையிற் பெண்களுக்கு உபகரித்தான்
  என்று கூறத் திருவுள்ளம்பற்றி, அவர்கள் அதிலே ஈடுபட்டு இருந்தார்கள்
  என்பதற்குப் பிரமாணம் அருளிச்செய்கிறார் ‘வெயர்வைத் துளிகள்’ என்று
  தொடங்கி.

  “ஸக்ய: பஸ்யத கிருஷ்ணஸ்ய முகம்அத்யருணேக்ஷணம்
   கஜயுத்த க்ருத ஆயாஸ ஸ்வேதாம்பு கணிகாசிதம்”

  என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 20 : 54. “பஸ்யத” என்கையாலே, உபகாரம்
  தோற்றுகிறது. ‘இங்ஙனேயோ வேர்ப்பது’ என்றது, தங்கள் கலவியிலே
  வேர்க்கக் கண்டிருக்கையாலே தங்கள் தனங்களிலே சேர்ந்தாற்
  போலேயோ? என்றபடி. வியாக்கியாதாவின் ஈடுபாடு, ‘முலையாகிற’ என்று
  தொடங்கும் வாக்கியம்.

3. “வைகல் நாளும் வைகின்றே” என்பது, சிந்தாமணி.