பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
206

    நீள்நிலத்தொடு வான்வியப்ப - பூமியிலுள்ளாரோடு சுவர்க்கத்திலுள்ளாரோடு வாசிஅற ஆச்சரியப்பட. கண்டவற்றுக்கெல்லாம் ஆச்சரியப்படும் மனிதர்களோடு ஒக்க, ஒன்றற்கும் வேறுபட்டவராகாதே தந்தாமைப் போரப் பொலிய நினைத்திருக்கும் தேவர்களும் ஆச்சரியப்படும்படி. கும்பிடுவாரோடு கும்பீடு கொள்வாரோடு வாசிஅறும்படியாக என்றபடி. ‘வியப்ப’ என்று மேலே வருகையினாலே, ‘கட்டில்கள் கூப்பிடுகின்றன’ என்பது போன்று, ‘நிலம், வான்’ என்பன ஆகுபெயர்கள். நிறை பெரும் போர்கள் செய்து-குறைவற்ற மஹாயுத்தத்தைச் செய்து. அதாவது, ஈசுவர அபிமானிகளான சிவன் முதலாயினோர்களும் கெட்டு ஓடும்படியான போரைச் செய்து என்றபடி. வாணன் ஆயிரம் தோள் துணித்ததும் - 1சம்பந்தமில்லாத விஷயங்களைப் பற்றின தோள்களைக் கழித்தபடி. 2‘இவன் கரபாதை ஆற்றமாட்டாமல் கண்டார்கால்களில் எல்லாம் குனிந்து திரியாநின்றான்’ என்று அந்தக் கரத்தைக் கழித்துவிட்டான். 3‘கை கழியப் போய்ச் சிவனை அடைந்தான், இவன் கரபாதை ஆற்றாமை’ என்று அதனைப் படைக்கு அடைத்துவிட்டான். 4வாணன் வேறு தெய்வத்தை பஜனம் பண்ணுகையன்றோ, அவனுக்கு இங்ஙனம் கை பிழைபாடு வந்தது என்று நாட்டார் கைவந்தபடி செய்கைக்காகச்

 

1. தலையைத் துணிக்காமல், தோள்களைத் துணித்ததற்குக் காரணத்தை
  அருளிச்செய்கிறார் ‘சம்பந்தமில்லாத’ என்று தொடங்கி.

2. ‘சம்பந்தமில்லாத விஷயங்களைப் பற்றுதற்குக் காரணம், ‘போர்
  இன்மையாலும் தோளில் உண்டான தினவின் மிகுதியாலும் வந்தசெருக்கு’
  என்று அதனைக் கழித்துவிட்டான் என்னுமதனை ரசோக்தியாக
  அருளிச்செய்கிறார் ‘இவன்கரபாதை’ என்று தொடங்கி. கரம் - இறையும்,
  கையும்.

3. மேலே ‘சம்பந்தமில்லாத விஷயங்களை’ என்று தொடங்கி அருளிச்செய்த
  வாக்கியத்தை விவரணம் செய்துகொண்டு, கரத்தைக் கழித்தது திவ்விய
  ஆயுதங்களாலே என்னுமதனை ரசோக்தியாக அருளிச்செய்கிறார் ‘கை
  கழியப்போய்’ என்று தொடங்கி. ‘படைக்கு அடைத்துவிட்டான்’ என்பதற்கு,
  திருவாழியாழ்வானுக்குச் செலவிட்டான் என்றும், சேனைக்குச் செலவிட்டான்
  என்றும் இருபொருள். படை - ஆயுதமும், சேனையும்.

4. ‘சம்பந்தமில்லாத பொருளைப் பற்றின கைகள்’ என்று இவற்றைச்
  சேதித்தால், நாட்டார் கை வந்தபடி தொழுகைக்கு உறுப்பாக இருக்கும்
  என்று செய்தான் என்னுமதனை ரசோக்தியாக அருளிச்செய்கிறார் ‘வாணன்’
  என்று தொடங்கி. கை பிழைபாடு - கைகள் அவனைவிட்டு வேறு
  தெய்வத்தைப் பற்றுதல். கைவந்தபடி - கைக்குத் தகுதியானபடி என்றும்,
  கைகளைப் படைத்ததற்குத் தகுதியாக என்றும் பொருள்.