பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
207

New Page 1

செய்தான். 1“ஈசுவரனை வணங்கும் பொருட்டு” என்றேயன்றோ சரீர சம்பத்தைக் கொடுத்தது. ஈசுவரன், கை வந்தபடி செய்யாதவர்களைக் கைமேலே தண்டிக்கை தக்கதே அன்றோ. சர்வேசுவரன் தன்னைப் பற்றுகைக்காக இவனோடே கைசெய்தன்றோ அடியிலே விட்டது. 2‘அதனை மதித்திலன், இவன் அறக் கை விஞ்சினான்’ என்று தண்டித்துவிட்டான். 3வேறு தெய்வத்தைப் பற்றிக் கையிலே பலம் பெற்றுவிட்டான். 4பகவானைப் பற்றுவதற்குக் கைம்முதல் இல்லாமை விட்டான் அன்றே. உட்பட மற்றும் பல - அவனுக்கும் 5பெருநிலை நின்றாரையும் முதுகுகாட்டும்படி செய்தபடி. 6“கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ” என்று பின்பு அன்றோ அவன் இவனை உள்ளபடி அறிந்தது.

    மாணியாய் நிலம் கொண்ட மாயன் - பெறில் ஜீவிப்பானாய்ப் பெறாவிடில் முடிவானாய், இரப்பிலே தழும்பு ஏறின வடிவைக்

 

1. கை வந்ததற்குக் காரணத்தை அருளிச்செய்கிறார் ‘ஈசுவரனை’ என்று
  தொடங்கி. “ஈசுவராய நிவேதிதும்” என்ற இந்தச் சுலோகத்தை மேலே
  பார்க்கவும். இந்தச் சுலோகத்தின் பொருளை ரசோக்தியாக அருளிச்
  செய்கிறார் ‘சர்வேசுவரன்’ என்று தொடங்கி. கைசெய்து - கையை
  இவனுக்குக் கொடுத்து என்றும், அலங்காரம் செய்து என்றும் பொருள்.

2. யுத்த கண்டூதியால் வந்த அகங்காரமுடையவனாகையாலே அவனுடைய
  கையைக் கழித்துவிட்டான் என்னுமதனை ரசோக்தியாக அருளிச்செய்கிறார்
  ‘அதனை மதித்திலன்’ என்று தொடங்கி. கண்டூதி - தினவு. கைவிஞ்சினான்
  -கைக்கு அடங்காதவனானான் என்றும், கைகளாலே அதிகன் ஆனான்
  என்றும் பொருள்.

3. வேறு தெய்வங்களை அவன் வணங்கினதற்குக் கரங்கள் அழிந்தவையே
  பலமாய்விட்டது என்னுமதனை ரசோக்தியாக அருளிச்செய்கிறார் ‘வேறு
  தெய்வத்தை’ என்று தொடங்கி. கையிலே பலம் பெற்றுவிட்டான்
  -உண்மையிலே பலம் பெற்றுவிட்டான் என்றும், கரங்கள் அறுதலாகிற
  பலத்தைப் பெற்றுவிட்டான் என்றும் பொருள்.

4. பகவானை அடைவதற்குக் கைகள் தக்கன அல்லாமையாலே விட்டான்
  அல்லன்; கர்வத்தாலே விட்டான் என்னுமதனையும் ரசோக்தியாக
  அருளிச்செய்கிறார் ‘பகவானை’ என்று தொடங்கி. கைம்முதல் இல்லாமை
  - மூலதனம் இல்லாமை என்றும், முதலிலே கை இல்லாமல் என்றும்
  பொருள். ‘விட்டான் அன்றே’ என்றது, கர்வத்தாலே விட்டான் என்றபடி.

5. பெருநிலை நின்றார் - உதவியாக நின்ற சிவன் முதலானோர்.

6. “சிவன் ஞானத்தால் மேம்பட்டவன்” என்னும்படி இருக்கிறவன்
  சர்வேசுவரனோடு எதிர் இடுவான் என்? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘கிருஷ்ண’ என்று தொடங்கி.

  “க்ருஷ்ண க்ருஷ்ண மஹாபாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம்
   பரேசம் பரமாத்மாநம் அநாதி நிதனம் பரம்”

 
என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 33 : 41.