பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
212

திரண்டபடி, 1பரமபதத்தில் “எந்தப் பரமபதத்திலே பழையர்களான சாத்தியர் என்கிற தேவர்கள் வசிக்கிறார்களோ” என்கிறபடியே, கனத்தார் உண்டாயிருக்கச் செய்தேயும், பாரம் இல்லை அன்றோ அகங்கார சம்பந்தமுடையார் இல்லாமையாலே. 2தங்கள் பாரத்தினை அவன் தலையிலே வைத்திருக்குமவர்களன்றோ அவர்கள். ஓர் மாபெரும் பாரதப்போர் பண்ணி - ஒப்பற்றதான மஹாபாரதமாகிற மஹா யுத்தத்தைச் செய்து. மாயங்கள் செய்து - பகலை இரவாக்குவது, ‘ஆயுதம் எடேன்’ என்று ஆயுதம் எடுப்பது, எதிரிகளுடைய மாமத்தைக் காட்டிக்கொடுப்பது ஆனவை தொடக்கமானவற்றைச் செய்து. சேனையைப் பாழ்பட நூற்றிட்டு - சேனை வெறுந்தறையாம் படி மந்திரித்து. 3“எவனுக்கு, மூன்று உலகங்கட்கும் நாதனும் ஜனார்த்தனனுமான கண்ணன் மந்திரியாயும் ரக்ஷகனாயும் சிநேகிதனாயும் இருந்தானோ, அந்தத் தர்ம்புத்திரனுக்கு ஜெயிக்கப்படக் கூடாதது யாதுளது” என்னக்கடவதன்றோ. 4‘ஆயுதம் எடுக்க ஒட்டோம், என்கையாலே சூழ்ச்சியாலே அழித்தான்.

    போய் விண்மிசைத் தன தாமமே புக மேவிய சோதி தன் தாள் - 5பகைவர்களை அழித்ததற்குமேலே அன்றோ இவர்கள் இருந்த நிலத்

 

1. “இதனைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமான கூட்டம்
  இருக்கச்செய்தேயும் பரமபதம் பொறுத்திருக்கவில்லையோ? அதனை
  நோக்கும் போது இதற்குப் பாரம் ஏது? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘பரமபதத்தில்’ என்று தொடங்கி.

  “யத்ர பூர்வே ஸாத்யா: ஸந்தி தேவா:”

  என்பது, புருஷசூக்தம். இங்குப் பாரம் என்கிறது, மக்கள் பாரம் அன்று;
  யான் எனது என்னும் செருக்கே பாரம் என்றபடி.

2. நித்தியசூரிகளுக்கு யான் எனது என்னும் செருக்கு இல்லையோ? என்ன,
  ‘தங்கள் பாரத்தினை’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
  ‘பரமபதத்தில்’ என்று தொடங்கியும், ‘தங்கள்’ என்று தொடங்கியும்
  அருளிச்செய்யும் இரண்டு வாக்கியங்களும் “மண்மிசை” என்று
  விசேடித்ததற்கு, பாவங்கள்.

3. மந்திரித்ததற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘எவனுக்கு’ என்று தொடங்கி.

  “யஸ்ய மந்த்ரீச கோப்தாச ஸுஹ்ருச்சைவ ஜநார்தந:
   ஹரிஸ் த்ரைலோக்ய நாதஸ்ஸ: கிந்து தஸ்ய ந நிர்ஜிதம்”

  என்பது, பாரதம் ஆரண்யபர்வம், 49 : 20.

4. மந்திரிக்கிறது என்? திருவாழியாலே அழிக்கலாகாதோ? என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘ஆயுதம்’ என்று தொடங்கி.

5. “போய்” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘பகைவர்களை’ என்று
  தொடங்கி.