த
தில் இராமல் பரமபதத்திலே
போய்ப் புகப்பெற்றபடி என்று உகக்கிறார். 1பொய்யாசனம் இடுவார், பரிபவிப்பவர்
இவர்களையுடைய இந்த நிலத்தை விட்டுப் பரிவரேயான பரமபதத்து ஏறப் போகப் பெறுவதே! 2“ப்ருது
லோசந: ப்ருதிவ்யா: பாராவதரணம் க்ருத்வா - நீண்ட கண்களையுடைய கண்ணன் பூமியினுடைய பாரத்தைக்
கழித்து, மோஹயித்வா ஜகத்சர்வம் - ப்ரதிகூலரை அடங்கலும் உழவு கோலாலே விழவிட்டு, அநுகூலரை
யடங்கலும் கண்களாலே விழவிட்டுப் போனான்; கத: ஸ்வம் ஸ்தானம் உத்தமம் - விண்மிசைத் தன
தாமமே புக்கான். உத்தமம் - கம்சன் முதலானோர் துரியோதனன் முதலானோர் இவர்களால் வரும் அச்சம்
இன்றியே, தனக்குப் பரிவரானவர்கள் இருக்கிற நிலத்திலே போய்ப் புகப் பெற்றபடி. 3ஒரு
தீர்த்தத்தின் அன்று நாயிறுபோது ஆண்டானும் எம்பாரும் தங்களிலே சந்தித்து, “யான்
எனது என்னும் செருக்கினால் மலினமாக்கப் பட்டவராயிருப்பார் பத்துக்கோடிபேர் நடுவே, அதிசுகுமாரமான
திருமேனியைக்கொண்டு பத்துநாள் எழுந்தருளி, அபாயம் இல்லாமல் புக்கருளப் பெற்றபடி கண்டதே!”
என்று ஒருவரை ஒருவர் தண்டன் இட்டுத் தழுவிக்கொள்ளாநிற்கக் கண்டேன் என்று சீயர்
அருளிச்செய்வர். நண்ணி நான் வணங்கப்பெற்றேன் - 4கால
1. உகப்பதற்கு, இங்கு நடந்த
பொல்லாங்குகள் யாவை? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘பொய்யாசனமிடுவார்’ என்று தொடங்கி.
2. பூமியின் பாரத்தைப்
போக்கித் தன் தாமத்தை அடைந்ததற்குப் பிரமாணம்
காட்டுகிறார் ‘பிருது லோசந:’ என்று தொடங்கி.
“க்ருத்வா பாராவதரணம்
ப்ருதிவ்யா: ப்ருது லோசந:
மோஹயித்வா ஜதத்ஸர்வம்
கத: ஸ்வம் ஸ்தாநம் உத்தமம்”
என்பது, பாரதம் மௌசலபர்வம்.
3. தன் தாமத்திலே போகப்
பெற்றது உகப்பாய் இருக்கும் என்னுமதற்குச்
சம்வாதம் காட்டுகிறார் ‘ஒரு தீர்த்தத்தின் அன்று’
என்று தொடங்கி.
நாயிறுபோது - சூரியன்படுகிற மாலை நேரத்தில். மலினம்-குற்றம்.
‘பத்துநாள்’
என்றது, சில ஆண்டுகள் என்பது பட நின்றது. “இல்லினுள்
இரண்டு நாளைச் சுற்றமே இரங்கல்வேண்டா”
என்பது, சிந்தாமணி.
4.
“வணங்கி நான் நண்ணப்பெற்றேன்” என்று கூட்டி, பாவம்
அருளிச்செய்கிறார் ‘காலயவனன்’ என்று தொடங்கி.
|