ஈ
ஈடு :-
முடிவில், 1கிருஷ்ணனுடைய செயல்களைப் பேசின
இப்பத்தும் கற்றார், தம்மைப் போன்றே கிருஷ்ணபக்தராவர் என்கிறார்.
முழு ஏழ் உலகுக்கும்
நாயகன் ஆய் - சேதந அசேதநங்கள் எல்லாவற்றையும் நியமிக்கின்றவனாய். முழு ஏழ் உலகும் தன்வாயகம்
புக வைத்து உமிழ்ந்து - பிரளயாபத்தில் திருவயிற்றிலே வைத்து ரக்ஷித்து, உள்ளிருந்து நெருக்குப்
படாமல் வெளிநாடு காணப் புறப்பட விட்டு. அவையாய் - எல்லாப் பொருள்களும் ‘தான்’ என்கிற
சொல்லிலே அடங்கும்படி அவற்றைப் 2பிரகாரதயா சரீரமாகவுடையனாய் அவை அல்லனுமாய்
- இப்படி இருக்கச்செய்தே அவற்றினுடைய தோஷங்கள் தீண்டப்படாதவனாயிருக்கின்ற. கேசவன் அடியிணைமிசைக்
குருகூர்ச் சடகோபன் சொன்ன - கேசி என்னும் அசுரனைக்கொன்ற சர்வேசுவரன் திருவடிகளிலே.
3“மேல் திருவாய் மொழியிற் சொன்ன சர்வேசுவரத்வத்தையும், இத்திருவாய்மொழியிலே, கேசியைக்
கொன்றவனான கிருஷ்ணனுடைய அவதாரத்தையும் அநுபாஷித்துத் தலைக்கட்டுகிறது” என்று சொல்லுவர். அன்றிக்கே,
1. “இப்பத்தால் பத்தராவர்”
என்றதனைக் கடாக்ஷித்து அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
2. பிரகாரதயா - விசேடணமாக
இருப்பதனாலே.
3. கிருஷ்ணாவதாரத்தைச்
சொல்லுகிற இத்திருவாய்மொழியில், சர்வேசுவரனாந்
தன்மையைச் சொல்லுவான் என்? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார்
‘மேல் திருவாய்மொழியில்’ என்று தொடங்கி. என்றது, ‘நாயகன் முழுவேழ்
உலகுக்குமாய்” என்றது முதல் “அவையல்லனுமாய்” என்றது முடிய,
“நல்குரவும்” என்ற திருவாய்மொழியிற்
கூறிய சர்வேசுவரத்தையும்,
“கேசவன்” என்றதனால், இந்தத் திருவாய்மொழியிற் கூறிய
கிருஷ்ணனுடைய
செயல்களையும் அநுவதித்துத் தலைக்கட்டுகிறார்
என்றபடி. மேலதற்கே, வேறும் ஒருவகையில் விடை
அருளிச்செய்கிறார்
‘எல்லா வுலகங்கட்கும்’ என்று தொடங்கி. என்றது, உலகத்தைப் படைத்தல்
காத்தல்
அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்கிறவன்
கண்ணபிரானே என்று சொல்லுகையாலே, இத்திருவாய்மொழியிற்
கூறிய
கிருஷ்ணன் செயல்களையே, இப்பாசுரத்திலே அநுபாஷித்துத்
தலைக்கட்டுகிறார் என்றபடி.
‘கிருஷ்ணவிஷயமே சொல்லுகிறது’ என்றது,
இப்பாசுரம் முழுதும், கிருஷ்ணனுடைய செயல்களையே கூறுகிறது
என்றபடி.
“க்ருஷ்ண ஏவஹி லோகாநாம்
உத்பத்திரபிசாப்யய:
க்ருஷ்ணஸ்ய ஹிக்ருதே பூதமிதம்
விஸ்வம் சராசரம்”
என்பது, மஹாபாரதம் சபாபர்.
38 : 23.
|