New Page 1
“எல்லா உலகங்கட்கும்
காரணன் கிருஷ்ணனே” என்கிறபடியே, கிருஷ்ண விஷயமே சொல்லுகிறது என்னுதல், தூய ஆயிரத்து இப்பத்தால்
துவள் இன்றிப் பத்தர் ஆவர் - இப்பத்தினையும் கற்றவர்கள் ஆழ்வாரைப் போலே ஆவர். இப்பத்தினையுடைத்தாகையாலே
தூய்மையையுடைத்தான ஆயிரம் என்னுதல்; அன்றிக்கே, ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு, கிருஷ்ணனுடைய
செயல்களைச் சொல்லுகையாலே தூய்மையையுடைத்தான இப்பத்து என்னுதல். துவள் இன்றியே பத்தர் ஆவர்
- துவள் - குற்றம். குற்றம் இல்லாமையாவது, வேறு அவதாரங்களில் போகாமல் கிருஷ்ணனுடைய செயல்களிலே
தாழ்தல்.
(11)
திருவாய்மொழி நூற்றந்தாதி
குரவைமுத லாம்கண்ணன்
கோலச் செயல்கள்
இரவுபகல் என்னாமல்
என்றும் - பரவுமனம்
பெற்றேன்என் றேகளித்துப்
பேசும் பராங்குசன்தன்
சொற்றேனில் நெஞ்சே! துவள்.
(54)
ஆழ்வார் எம்பெருமானார்
சீயர் திருவடிகளே அரண்.
|