பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
217

ஐந

ஐந்தாந் திருவாய்மொழி - “துவளில்”

முன்னுரை

    ஈடு :- 1இத் திருவாய்மொழிக்கு முன்னும் பின்னும் எல்லாம் எம்பெருமானைக் கவிபாடினார்; இத் திருவாய்மொழியில் தம்முடைய படி சொல்லுகிறார். 2சிம்ஹாவலோகந நியாயத்தாலே 3“பொய்ந்நின்ற” என்னும் பாசுரம் தொடங்கி இவ்வளவும் வரத் தமக்குப் பகவத் விஷயத்தில் உண்டான பிராவண்யத்தின் மிகுதியை அந்யாபதேசத்தாலே பேசுகிறார். 4“இத்திருவாய்மொழி, ஆழ்வார் தன்மை சொல்லுகிறது” என்று நம் முதலிகள் எல்லாரும் போர விரும்பி இருப்பர்கள். 5பகவானுடைய திருவருளாலே அடைந்த ஞானத்

 

1. சங்கிரஹமாகச் சங்கதி அருளிச்செய்கிறார் ‘இத்திருவாய்மொழிக்கு’ என்று
  தொடங்கி, ‘தம்முடைய படிசொல்லுகிறார்’ என்றது முடிய.
  இத்திருவாய்மொழியில் வருகின்ற “முன்னம் நோற்ற விதிகொலோ”
  என்பது போன்றவைகளையும், “பின்னை கொல்?” என்பது
  போன்றவைகளையும், “சிந்தையாலும்” என்பது போன்றவைகளையும்
  கடாக்ஷித்துத் ‘தம்முடைய படி சொல்லுகிறார்’ என்கிறார்.

2. ‘தம் படி யாது? என்ன, ‘சிம்ஹாவலோகநம்’ என்று தொடங்கி அதற்கு
  விடை அருளிச்செய்கிறார். சிம்ஹாவலோகநம் - சிங்க நோக்கு.

  ஆற்றொழுக் கரிமா நோக்கந் தவளைப்
  பாய்த்துப் பருந்தின் வீழ்வன்ன சூத்திரநிலை.

  என்பது, நன்னூல்.

3. ‘பொய்ந்நின்ற என்னும் பாசுரம் தொடங்கி’ என்றது, “கை தொழுத
  வந்நாள்தொடங்கி” என்றதனைத் திருவுள்ளம்பற்றி. “பொய்ந்நின்ற” என்பது,
  திருவிருத்தம், செய். 1

4. ‘தம் படி சொல்லுகிறார்’ என்றதற்குச் சம்வாதம் காட்டுகிறார்
  ‘இத்திருவாய்மொழி’ என்று தொடங்கி.

5. தம்படிகளைத் தாமேசொன்னால், தற்புகழ்ச்சி ஆகாதோ? என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘பகவானுடைய’ என்று தொடங்கி. என்றது,
  ஆப்தியின் பொருட்டுச் சொல்லுகிறாராகையாலே குற்றமில்லை என்றபடி.

  மன்னுடை மன்றத்து ஓலைத் தூக்கினும்
  தன்னுடை யாற்றல் உணரா ரிடையினும்
  மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும்
  தன்னை மறுதலை பழித்த காலையும்
  தன்னைப் புகழ்தலும் தகும்புல வோற்கே.

  என்பது நன்னூல்.

 
    திருவடி தன்னைப் புகழ்ந்து பேசுதலையும் ஈண்டு ஒப்பு நோக்கத்தகும்.
  கம்ப. கிஷ்கிந். மகேந்திரப். 20-முதல் 24-முடியக் காண்க.