த
தினையுடையவராய்,
“வேதவாக்குக்கள் அந்த ஆனந்த குணத்தினின்றும் திரும்பின” என்கிற விஷயத்தை மறுபாடு உருவப் பேசினதாமே
வேணுமாகாதே தம்படி பேசும்போதும்.
1ஸ்ரீஜனகராஜன்
திருமகள் பிறந்த சமயத்திலே சோதிடர்களை அழைத்து, ‘இவள் ஜீவிக்கும்படிகள் என்?’
என்று கேட்க, ‘இவள் ஜீவிக்கும்படிகளில் ஒரு குறை இல்லை, எல்லாவுலகங்களையுமுடைய ஒருவனைக் கைப்பிடிக்கவும்
கடவள்; இங்ஙனே இருக்கச் செய்தேயும் வனவாச ரசம் அநுபவிக்கக் கடவள்’ என்றார்கள்; அப்படியே,
இப் பெண்பிள்ளை பிறந்தபோது இவள் திருத்தாயார் உள்ளிட்டார், காரணம் அறிந்தவர்களை அழைத்து,
‘இவள் ஜீவிக்கும்படிகள் எங்ஙனே?’ என்று கேட்க, ‘எல்லாம் நன்றாகத் தலைக்கட்டக்கடவன;
ஆனாலும், இவளுக்கு ஓர் அகால மரணம் உண்டு; அது தப்பினாளாகில் சுகமே ஜீவிக்கும். அதாவது, திருத்
தொலை வில்லி மங்கலத்திற் கொடுபோகாதே ஒழியப் பெறில் இவளைப் பெறலாம்’ என்றார்கள்.
2இவள் மரணத்தையே அடையினும் திருத்தொலை வில்லிமங்கலத்தில் கொடுபோகாது ஒழியவல்ல
குடி அன்றே; 3‘இவள் அங்கேபுக்கு இறப்பினும் அமையும்’ என்று இருப்பார் சிலர்
அன்றோ. 4பிராட்டி வனவாச ரசம் அநுபவியாத அன்றே அன்றோ இவள் திருத் தொலை
வில்லி மங்கலத்தில் புகாதொழிய வல்லளாவது. ஸ்ரீநளர் வார்த்தையை நினைப்பது.
1. தோழியானவள், தாய்மாரைப்
பார்த்துப் “பிரான் இருந்தனை காட்டீனீர்”
என்று திருத்தொலைவில்லிமங்கலத்திலே கொண்டுபோனால் இவளுக்குக்
கேடு வரும் என்று அறிந்திருந்தும் கொண்டுபோனீர்கள் என்கிறாள்;
அங்கே கொண்டுபோனால் இவளுக்கு அநர்த்தம் வரும் என்று
தாய்மார்கள் எதனால் அறிந்தார்கள்? என்ன, அறிந்தமையைத்
திருஷ்டாந்தத்தோடு அருளிச்செய்கிறார் ‘ஸ்ரீஜனகராஜன்’ என்று தொடங்கி.
2. இப்படி அறிந்திருந்தும் கொண்டு போவான் என்? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘இவள் மரணத்தையே அடையினும்’ என்று தொடங்கி.
3. அந்தக் குடியிலுள்ளார் படியினை அருளிச்செய்கிறார் ‘இவள் அங்கே’
என்று தொடங்கி.
4. குடியின் தன்மை மாத்திரமெயன்று;
தெய்வத்தின் கல்பிதமாகையாலும்
தவிரஒண்ணாது என்னுமதனைத் திருஷ்டாந்தத்தோடு காட்டுகிறார்
‘பிராட்டி’ என்று தொடங்கி. தெய்வத்தின் கல்பிதமாகையாலும்
என்பதற்குச் சம்வாதம் காட்டுகிறார் ‘ஸ்ரீநளர் வார்த்தையை நினைப்பது’
என்று. என்றது, சமுத்திரராஜன் தோன்றி வந்து, ‘விசுவகர்மாவின் மகனான
நளன் சேதுபந்தனத்துக்கு என்று கல்பிதனாயிருக்கிறான்,
அவனைக்கொண்டு
|