1
1தேஹாத்மாபிமாநிகளாய்
இருப்பார்க்கு எத்தனையேனும் அறிவு பிறந்தாலும் ‘நான் பருத்தவன், நான் இளைத்தவன்’
என்கிற நிலைமாற்றப் போகாதவாறுபோலே, இவரையும் எல்லா வகையாலும் உகந்தருளின நிலங்களிலே நின்றும்
திருஷ்டத்தில் குறைசொல்லி மீட்கப் போகாது. 2சிற்றின்பத்திலே ஈடுபாடு உடையராயிருப்பார்
‘அதர்மம்’ என்றும், ‘பழி’ என்றும், ‘மேல் நரகம்’ என்றும் சொன்னால் சிற்றின்பத்தில் நின்றும்
மீளார்களே அன்றோ. 3இங்குக் குணாதிக விஷயமாகையாலே ஒரு குறை சொல்லி மீட்கப்போகாதே.
4‘குறை சொல்லுவோம்’ என்று நினைக்கிலும் குணங்களின் மிகுதியைச்
சொல்லுமத்தனை அன்றோ. 6அது பின்னை ஈடுபாட்டுக்குக் காரணமாமத்தனை அன்றோ.
6பழியும் உண்டாயிடுக, மதிப்புக்கேடும் வருக; ஆனாலும், அது கண்டு மீளமாட்டாத உறுதியன்றோ
இவளது. 7அங்ஙனேயாகிலும், இவர்கள் இவ்விஷயத்தில் நின்றும் இவளை மீட்கப்
பார்க்கிறது என்? என்னில், ‘பருவம் நிரம்பாதிருக்கச் செய்தேயும் நம்மளவு அல்லாத அளவு கடந்த
ஈடுபாடு இவளுக்கு விளையா நின்றது; அது இவளை இழக்க வரின் செய்வது என்?’ என்னும்
என்பக்கலிலே சேதுபந்தனம் செய்து
கொள்ளும்’ என்று சொல்லிப்போன
அளவிலே, பெருமாள் திருவடிகளிலே நளன் வந்து சேவித்து ‘சமுத்திர
ராஜன் வார்த்தை சத்தியமே; நான் சேதுபந்தனம் செய்யவல்லேன்’ என்று
கூறிய வார்த்தையை நினைப்பது
என்றபடி.
1. அங்கே கொண்டுபுக்காலும்,
அவ்விஷயத்துக்கு ஏதேனும் குறை சொல்லி
மீட்க ஒண்ணாதோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘தேஹாத்மாபிமாநிகளாயிருப்பார்க்கு’ என்று தொடங்கி, ‘உறுதியன்றோ
இவளது’ என்றது முடிய. திருஷ்டத்தில்
குறை - ஐசு்வரியத்தில் குறை.
2. அதற்குக் காரணம் என்?
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘சிற்றின்பத்திலே’ என்று தொடங்கி.
3. திருஷ்டத்தில் குறைசொல்லி
மீட்கப் போகாவிட்டாலும், விஷயத்திற்
குறைசொல்லி மீட்க ஒண்ணாதோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘இங்குக் குணாதிக விஷயமாகையாலே’ என்று
தொடங்கி.
4. குணாதிக விஷயமேயாகிலும்
“கடியன் கொடியன்” என்றாற் போலே சில
குறைகளைச் சொன்னாலோ என்ன, அதற்கு விடை அருளிச் செய்கிறார்’
குறை சொல்லுவோம்’ என்று தொடங்கி.
5. “கொடிய என்நெஞ்சம்
அவன் என்றே கிடக்கும்” என்றதனைத்
திருவுள்ளம்பற்றி, ‘அது பின்னை’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.
6. பிராவண்யத்தால் மீட்கப்போகாத
மாத்திரமன்றிக்கே, அல்விஷயத்தில்
மிக்க உறுதிகொண்டவளாதலாலும் மீட்கப்போகாது என்கிறார்
‘பழியும்’
என்று தொடங்கி.
7. ‘அங்ஙனேயாகிலும்’
என்றது, குடிப்பிறப்பு தானே அங்கே கொண்டுபோய்
மூட்டுகையாலும், தெய்வவசத்தாலும், இவளுடைய
பிராவண்யத்தாலும், மன
உறுதியினாலும் இப்படி அபஹரிக்கப்பட்டவளாயிருந்தும் என்றபடி.
|