பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
220

அச

அச்சமாயிற்று இவர்களுக்கு ஓடுகிறது. 1இனித்தான், அளவு கடந்த ஈடுபாடு சாதனத்தை அநுஷ்டிப்பார் கையிலே கிடக்கக் காண்கையாலே ‘இவள் சாதன புத்தியால் இழியின் செய்வது என்?’ என்னும் அச்சத்தாலே மீட்கவும் பார்ப்பரே. 2‘இந்த ஈடுபாடு சொரூபத்திற்கு விரோதமானாலன்றோ சாதனத்தில் சேர்வது என்றே அன்றோ இருப்பது இவள். 3‘சொரூபபேதத்துக்கு இசைந்தால் சொரூபத்திற்குத் தகுதியான காரியங்களுக்கு இசைய வேண்டாவோ?’ என்று காணும் இவள் கருத்து. 4சேஷிக்கு உபாயமாயிருத்தல் சொரூபத்திற்குச் சேர்ந்தது ஆனபின்பு, சேஷனாயிருப்பவனுக்கும் பிராவண்யம் சொரூபத்தில் கட்டுப்பட்டதாகக் கடவதன்றோ. 

    5
இனித்தான், மேல் திருவாய்மொழியோடு இத் திருவாய்மொழி சேர்ந்திருக்கும்படி என்? என்னில், கிருஷ்ணனுடைய குணங்களை அநுபவியாநிற்கச்செய்தே, குடிக்கிற தண்ணீர் விக்கி அதுதானே பரவசமாந் தன்மையை விளைப்பிக்குமாறு போலே, அந்த அநுபவம்தானே வேறு ரசத்திலே மூட்டத் தமக்குப் பிறந்த துன்பத்தை அந்யாபதேசத்தாலே பேசுகிறார். அதாவது, “பொய்ந்நின்ற ஞானம்” தொடங்கி இவ்வளவும் வர, பகவத் விஷயத்தில் பூர்ண அநுபவம் இன்றிக்கே இருக்கையாலே, தமக்குப் பிறந்த

 

1. மீட்கப் பார்ப்பதற்குச் சுவாபதேசத்திலே காரணம் அருளிச்செய்கிறார்
  ‘இனித்தான்’ என்று தொடங்கி.

2. ‘மிகுந்த பிராவண்யம் சொரூபத்திற்கு மாறாகில் செய்வது ஏன்?’ என்னும்
  அச்சம் மகளுக்கும் ஒவ்வாதோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘இந்த ஈடுபாடு’ என்று தொடங்கி. ‘சொரூபத்திற்கு விரோதமானால்
  அன்றோ’ என்றது, ‘நாம் அவனாலேயே பாதுகாக்கப்படும் பொருள்’ என்ற
  சொரூபத்திற்கு மாறுபட்டால் அன்றோ என்றபடி.

3. சொரூபத்திற்கு மாறுபட்டது அன்று என்கைக்குக் கருத்து யாது? என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘சொரூப பேதத்துக்கு’ என்று தொடங்கி.
  என்றது, ‘அவன் சேஷி, நாம் சேஷபூதர்’ என்கிற சொரூப பேதத்திற்கு
  என்றபடி. ‘காரியங்களுக்கு’ என்றது, பிராவண்யத்தின் காரியமான
  கைங்கர்யங்களுக்கு என்றபடி.

4. இவளுக்கு இப்படிக் கருத்தானாலும், பொருளின் தன்மையாலே சாதனத்தில்
  சேராதோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘சேஷிக்கு’ என்று
  தொடங்கி.

5. மேல் திருவாய்மொழியோடு இத்திருவாய்மொழிக்கு இயைபுயாது? என்று
  சங்கித்து, அதற்கு இரண்டு வகையாக விடை அருளிச்செய்கிறார்
  ‘இனித்தான்’ என்று தொடங்கி. முதல் விடை, பட்டர் நிர்வாஹம்.
  இரண்டாவது விடை, பூர்வர்கள் நிர்வாஹம். ‘வேறு ரசத்திலே’ என்றது,
  மோஹத்திலே -என்றபடி. அன்றிக்கே, அர்ச்சாவதார குணாநுபவத்தில்
  என்னுதல்.