ப
பிராவண்யத்தின் மிகுதியை
அருளிச்செய்கிறார். அன்றிக்கே, மேலே அநுபவித்த அநுபவம்தான் மானச அநுபவமாத்திரமாய், புறத்திலேயும்
அநுபவிக்கவேண்டும் என்ற அபேக்ஷை பிறந்து, அது பெறாமையால் வந்த கலக்கத்தை அந்யாபதேசத்தாலே
பேசுகிறார் என்னலுமாம். 1இப்பெண்பிள்ளையின் தன்மையை அறியச் செய்தேயும் தாய்மார்
விழுக்காடு அறியாமையாலே திருத் தொலை வில்லி மங்கலத்திலே கொடுபுக, அவள் “அரவிந்தலோசந”
என்பது, “தேவபிரான்” என்பது: நீர்மையைச் சொல்லுவது, மேன்மையைச் சொல்லுவது, ஒப்பனை
வாசி அறிந்தமை தோற்றச் சொல்லுவதாய் வாய்வெருவ, இவள் நிலை இருந்தபடியால் ‘இவள் கிடைக்கமாட்டாளே
அன்றோ’ என்று தாய்மார் வெறுத்துத் தோழிபாடே வந்து, ‘இவள்படி உனக்குத் தெரியாமை இல்லை;
இவளை மீட்கலாம் விரகு சொல்லவேண்டும்’ என்ன, தோழி, 2‘நீங்களே இவளுக்குப்
பிராவண்யத்தை உண்டாக்கி இப்போதாக இவளை மீட்க ஆசைப்படுகிற இதனால் பிரயோஜனம் என்?
முன்னரே விலக்கப் பெற்றிலீர்; இனி, இவள் பக்கல் நசை அறுங்கோள்; இவளைத் தடைசெய்யப்
பாராமல் நீங்களும் துணையாக இருந்து இவள் உஜ்ஜீவிக்கும்படி பண்ணப் பாருங்கோள்’ என்கிறாள்.
3தாய்மார் கேட்கத் தோழி அன்றோ சொல்லுகிறாள்; 4பகவத் விஷயத்துக்குப்
“பழையார், புதியார்” என்று இலர்; தேசிகர் சொல்ல ஆதரமுடையார் கேட்குமித்தனை.
1. சோதிடர்கள் கூறிய
பின்பு இவர்கள் செய்தது என்? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘இப்பெண் பிள்ளையின்’
என்று தொடங்கி.
“அரவிந்தலோசந” என்றதனால் நீர்மையையும், “தேவ பிரான்” என்றதனால்
மேன்மையையும்,
“இழைகொள் சோதி” என்றதனால் ஒப்பனையையும்
கொள்க. “நாடொறும் வாய்வெரீஇ” என்றதனைத் திருவுள்ளம்பற்றி
‘வாய்வெருவ’ என்கிறார்.
2. ‘நீங்களே இவளுக்குப்
பிராவண்யத்தை உண்டாக்கி’ என்றது, “பிரான்
இருந்தமை காட்டினீர்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி,
“இனி உமக்கு
ஆசை இல்லை” என்றதனைத் திருவுள்ளம்பற்றி ‘முன்னரே
விலக்கப்பெற்றிலீர்’ என்று
தொடங்கி அருளிச்செய்கிறார்.
3. மேலே, இதில் சொரூபத்திற்குத்
தகுதியானது ஓர் அர்த்தத்தை
விளக்குவதற்காக அடி இடுகிறார் ‘தாய்மார்’ என்று தொடங்கும்
வாக்கியத்தால்.
4. முதியோரான
தாய்மார்கள், இளையளான தோழிபக்கலிலே பகவத்
விக்ஷயம் கேட்கலாமோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார்
‘பகவத் விஷயத்துக்கு’ என்று தொடங்கி.
|