|
1
1பெற்ற
தாய்மார் ‘விடுமின்’ என்ற அளவிலே விடார்களே அன்றோ; பின்னையும் நிர்ப்பந்திக்க
வேண்டா, இவளுக்கு ஓடுகிற ரசத்தைக் கண்டுகொடு நிற்கப்பாருங்கோள் என்கிறாள் என்றது, இவளுடைய
அனுபவத்திற்குத் தண்ணீர்த் துரும்பு ஆகாதே இதனைக் கண்டு கொடு நிற்க அமையும் என்கிறாள் என்றபடி.
2‘எங்களை ‘ஆசைப்படவேண்டா, விடுங்கோள்’ என்கிறது என்? என்னில், இவள் பேச்சிலும்
நினைவிலும் நீங்களாதல் நானாதல் உண்டோ? “புத்திரர்களையும் மனைவியையும் துறந்து” என்னும் நிலையன்றோ
இவளது!
தவளம் ஒண் சங்கு
- கரியநிறமுடைய திருமேனிக்குப் பரபாகமான வெண்மையையுடைத்தாய், 3“உண்பது
சொல்லில் உலகளந்தான் வாயமுதம்” என்கிற அழகையுடைத்தான சங்கு. சக்கரம் - அங்ஙனம் ஒரு விசேடணம்
இட்டுச் சொல்ல வேண்டாத அழகையுடைய சக்கரம். என்றும் - ‘இவற்றைக்காணவேணும்’ என்னுதல்;
‘இவற்றோடே வரவேணும்’ என்னுதல் சொல்லமாட்டுகின்றிலள் பலக்குறைவாலே. தாமரைத்தடம் கண் என்றும்
- அந்த ஆழ்வார்கள் அளவும் வந்து அலை எறிகிற திருக்கண்கள். தாமரையை ஒருவகைக்கு ஒப்பாகச்
சொல்லலாய், அநுபவிக்கின்றவர்கள் அளவன்றிக்கே இருக்கின்ற திருக்கண்கள் ஆதலின் ‘தடம்கண்’
என்கிறாள். 4ஒருமலை எடுத்தாற் போலே சொல்லுக்குச் சொல்லு தளர்ந்து நடு நடுவே
விட்டு விட்டுச் சொல்லுகிறாள் என்பாள் ‘என்றும் என்றும்’ என்கிறாள். 5திவ்வியாயுதங்களையும்
கண்ணழகையும் காட்டியாயிற்று இவளைத் தோற்பித்தது. குவளை
1. மேலே வருகின்ற “குவளை
ஒண்மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று
குமுறுமே” என்றதனை நோக்கி அவதாரிகை அருளிச்செய்கிறார்
‘பெற்றதாய்மார்’ என்று தொடங்கி.
2. அதற்கே, வேறும் ஓர்
அவதாரிகை அருளிச்செய்கிறார் ‘எங்களை’ என்று
தொடங்கி.
“த்யக்த்வா
புத்ராம்ஸ்ச தாராம்ஸ்ச ராகவம் ஸரணம் கத:”
என்பது, ஸ்ரீராமா. யுத். 17 : 14.
என்னும் நிலையினர் - ஸ்ரீ விபீஷணாழ்வான்.
3. “உண்பது” என்பது, நாய்ச்சியார்
திருமொழி.
4. திருவாய்மொழி ஈட்டின்
தமிழாக்கம் நாலாம்பத்து, 2 : 9. உரை பார்க்கவும்.
5. திவ்விய
ஆயுதங்களையும் திருக்கண்களையும் வர்ணிப்பதற்கு, பாவம்
அருளிச்செய்கிறார் ‘திவ்வியாயுதங்களையும்’
என்று தொடங்கி.
|